Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐக்கிய அமீரக அணிக்கு எதிரான முதல் டி20 தொடரில் நியூசிலாந்து வெற்றி

ஐக்கிய அமீரக அணிக்கு எதிரான முதல் டி20 தொடரில் நியூசிலாந்து வெற்றி

By: Nagaraj Fri, 18 Aug 2023 4:48:43 PM

ஐக்கிய அமீரக அணிக்கு எதிரான முதல் டி20 தொடரில் நியூசிலாந்து வெற்றி

துபாய்: ஐக்கிய அமீரக அணிக்கு எதிரான முதல் டி20 தொடரில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.

3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ளது. முதல் போட்டி துபாயில் நேற்று இரவு நடந்தது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 6 விக்கெட்டுக்கு 155 ரன்கள் சேர்த்தது.

first t20 series,new zealand,team,united arab emirates,win ,அணி, ஐக்கிய அமீரகம், நியூசிலாந்து, முதல் டி20 தொடர், வெற்றி

அதிகபட்சமாக டிம் செய்பெர்ட் 55 ரன்களும், கோலே மெக்கோன்சி 31 ரன்களும் எடுத்தனர். அடுத்து களம் இறங்கிய ஐக்கிய அரபு அமீரகம் 19.4 ஓவர்களில் 136 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் நியூசிலாந்து 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

விக்கெட் கீப்பர் அரியான்ஷ் ஷர்மா அரைசதம் (60 ரன், 43 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசியும் பலன் இல்லை. நியூசிலாந்து கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான டிம் சவுதி 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும். 2-வது 20 ஓவர் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.

Tags :
|