Advertisement

ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது ஒடிஷா அணி

By: Nagaraj Sun, 08 Jan 2023 10:16:16 PM

ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தியது ஒடிஷா அணி

புவனேஸ்வர்: இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் ஒடிஷா அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

11 அணிகள் பங்கேற்கும் 9வது இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. புவனேஸ்வரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால், ஒடிசா அணிகள் மோதின.

bhubaneswar,east bengal,indian super league football,odisha , இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து, ஈஸ்ட் பெங்கால், ஒடிசா, புவனேஸ்வர்

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணியின் கிளேட்டன் சில்வா ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஒடிசா அணிக்காக டியாகோ ஆட்டத்தின் 22 மற்றும் 53வது நிமிடங்களில் இரண்டு கோல்களை அடித்தார். மேலும் ஆட்டத்தின் 45+2வது நிமிடத்தில் நந்த குமார் ஒரு கோல் அடித்தார்.

ஆட்டநேர முடிவில், ஒடிஷா அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்கால் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Tags :