Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • என்றாவது ஒரு நாள் விண்ணில் இணைந்து விளையாடுவோம் - பீலே உருக்கம்

என்றாவது ஒரு நாள் விண்ணில் இணைந்து விளையாடுவோம் - பீலே உருக்கம்

By: Karunakaran Fri, 27 Nov 2020 1:40:53 PM

என்றாவது ஒரு நாள் விண்ணில் இணைந்து விளையாடுவோம் - பீலே உருக்கம்

கால்பந்து ஜாம்பவான்களில் ஒருவரான அர்ஜென்டினா அணியின் முன்னாள் கேப்டன் டியாகோ மரடோனா நேற்று முன்தினம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அர்ஜென்டினாவின் அடையாளமாக அறியப்பட்ட மரடோனாவின் மறைவையொட்டி அந்த நாட்டில் மூன்று நாட்கள் தேசிய துக்கதினம் அனுசரிக்கப்படுகிறது.

தலைநகர் பியூனஸ் அயர்சில் உள்ள அதிபர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். சவப்பெட்டியை சுற்றி அர்ஜென்டினா தேசிய கொடியும், அவர் அணிந்த எண் 10 பொறிக்கப்பட்ட சீருடையும் போர்த்தப்பட்டிருந்தது. 60 வயதான மரடோனாவுக்கு அர்ஜென்டினா மட்டும் இன்றி உலகம் முழுவதும் ரசிகர் பட்டாளம் உண்டு. தனது நளினமான ஆட்டத்தால் ரசிகர்களை கவர்ந்த மரடோனா 1986-ம் ஆண்டு உலக கோப்பையை அர்ஜென்டினாவுக்கு வென்றுத் தந்தார்.

pele,diego-maradona,death,condolness ,பீலே, டியாகோ-மரடோனா, மரணம், இரங்கல்

ஓய்வுக்கு பிறகு அர்ஜென்டினா அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்ட போதிலும் பெரிய அளவில் ஜொலிக்க முடியாமல் விலகினார். நிறைய கிளப்புகளுக்கு பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவம் உண்டு. மரடோனாவின் திடீர் மரணத்திற்கு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கல் செய்தியில், மரடோனா கால்பந்து விளையாட்டின் ஒரு மேதை. தனது விளையாட்டு வாழ்க்கை முழுவதும், களத்தில் மறக்க முடியாத சில மகிழ்ச்சியான தருணங்களை நமக்கு வழங்கினார். அவரது திடீர் மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்’ என்று கூறியுள்ளார்.

உலக புகழ்பெற்ற பிரேசில் முன்னாள் வீரர் 80 வயதான பீலே அவரது மரணம் குறித்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், இது சோகமான செய்தி. நான் சிறந்த நண்பனையும், கால்பந்து உலகம் ஒரு ஜாம்பவானையும் இழந்துள்ளது. ஒரு நாள் நானும், அவரும் விண்ணுலகில் ஒன்றாக இணைந்து விளையாடுவோம் என்று நம்புகிறேன் என்று உருக்கமாக தெரிவித்தார்.

Tags :
|
|