Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வேயை வீழத்தியது பாகிஸ்தான் அணி

முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வேயை வீழத்தியது பாகிஸ்தான் அணி

By: Nagaraj Sat, 07 Nov 2020 10:52:33 PM

முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வேயை வீழத்தியது பாகிஸ்தான் அணி

ஜிம்பாப்வே அணியை முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி வென்றுள்ளது.

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில்பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி ராவல்பிண்டியில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் ஷமு முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடர்ந்து களமிறங்கிய ஜிம்பாப்வே அணியில். கேப்டன் ஷமு, 0 ரன்களிலும், அடுத்து வந்த வில்லியம்ஸ் 25 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து டெய்லரும் 20 ரன்னில் ரன்களில் வெளியேறிய நிலையில், மற்ற வீர்ர்கள் சொற் பரன்களில் வெளியேறினர். நிலைத்து நின்று ஆடிய மட்ஹிவிரி 48 பந்துகளில் 70 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார்.

pakistan,zimbabwe,cricket,victory,tour ,பாகிஸ்தான், ஜிம்பாப்வே, கிரிக்கெட், வெற்றி, சுற்றுப்பயணம்

நிர்ணையிக்கப்பட்ட, 20 ஓவர் முடிவில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியின் ஹரிஸ் அவ்ஃ, ரியாஸ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். தொடர்ந்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர் பக்கர் சமான் 19 ரன்னுடன் சமான் வெளியேறினார்.

அடுத்து வந்த ஹைதர் அலி 7 ரன்னில் வெளியேறிய நிலையில், அடுத்து வந்த முகமது ஹபீஸ் 32 பந்துகளில் 36 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். கேப்டன் அசம் 55 பந்துகளில் 82 ரன்களை குவித்து வெளியேறினார்

18.5 ஓவரில் 4 விக்கெட் இழந்த பாகிஸ்தான் அணி வெற்றி இலக்கான 157 ரன்களை எட்டியது. இதன் மூலம் ஜிம்பாப்வே அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.

Tags :