Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் நடந்த லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் தோல்வி

மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் நடந்த லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் தோல்வி

By: Nagaraj Wed, 22 Feb 2023 9:22:19 PM

மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் நடந்த லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் தோல்வி

கேப்டவுன்: மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் நடந்த லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது.

டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய நாட் சீவர் 40 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தார்.

தொடக்க ஆட்டக்காரர் டேனியல் வியாட் 59 ரன்கள் எடுத்தார். அதன்பின் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களம் இறங்கியது. சீரான இடைவெளியில் பாகிஸ்தான் விக்கெட்டுகள் சரிந்தன. யாரும் நிற்கவில்லை.

lost,pakistan,womens t20 world cup, ,தோல்வி, பாகிஸ்தான், மகளிர் டி20 உலக கோப்பை

இறுதியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்து பரிதாபமாக தோற்றது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

பாகிஸ்தான் 3 ஆட்டங்களில் தோல்வியடைந்தது. குரூப் பி பிரிவில் இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

Tags :
|