Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இந்திய ரசிகருக்கு இந்திய தேசியக் கொடியில் கையெழுத்திட்ட பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி

இந்திய ரசிகருக்கு இந்திய தேசியக் கொடியில் கையெழுத்திட்ட பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி

By: Nagaraj Wed, 09 Nov 2022 4:34:16 PM

இந்திய ரசிகருக்கு இந்திய தேசியக் கொடியில் கையெழுத்திட்ட பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி

இஸ்லாமாபாத்: இந்திய தேசியக் கொடியில் கையெழுத்திட்ட படம்... பாகிஸ்தான் வீரர் ஷாஹீன் அப்ரிடி இந்திய ரசிகருக்கு இந்தியக் கொடியில் கையெழுத்திட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.. பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி தனது மாமனார் ஷாகித் அப்ரிடியை பின்பற்றி வருவதாக கருத்துக்கள் இணையத்தில் உலா வருகின்றன.


டி20 உலகக் கோப்பையில் இருந்து கிட்டத்தட்ட வெளியேறிய பிறகு, அந்த அணி மீண்டும் ஒரு அதிசயமான முறையில் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறியது. நெதர்லாந்து அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்ததால் பாகிஸ்தான் வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.


பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இன்னும் சரியான ஃபார்மில் இல்லை என்றாலும், வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் நல்ல பார்மில் இருக்கிறார். முதல் அரையிறுதியில் பாகிஸ்தான் அணி நியூசிலாந்தை இன்று சிட்னியில் எதிர்கொள்கிறது.

pakistan,pakistan player afridi,cricket news in tamil ,புகைப்படம், வைரல், அப்ரிடி கையெழுத்து, ரசிகர், டி20 போட்டிகள்

ஷஹீன் தற்போது டி20 உலகக் கோப்பையில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் சிட்னியில் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி, இந்திய ரசிகருக்கு இந்திய தேசிய மூவர்ணக் கொடியில் கையெழுத்திட்டார். 2018ம் ஆண்டில், இவரது மாமனார் ஷாஹித் அப்ரிடியும் மூவர்ணக் கொடிக்கு மரியாதை காட்டினார். போட்டி முடிந்ததும் இந்திய ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

முன்னதாக, அஃப்ரிடி இந்திய கிரிக்கெட் ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கும்போது மூவர்ணக் கொடி நிமிர்ந்து இருக்கிறதா என்று கவனித்து, மூவர்ணக் கொடியை நிமிர்ந்து பிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். 22 வயதான ஷஹீன் ஷா அப்ரிடி கையெழுத்து போட்டு கொடுக்கும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..

Tags :