Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இங்கிலாந்து தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்படும் - வக்கார் யூனிஸ்

இங்கிலாந்து தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்படும் - வக்கார் யூனிஸ்

By: Karunakaran Wed, 22 July 2020 10:10:40 AM

இங்கிலாந்து தொடரில் பாகிஸ்தான் அணி சிறப்பாக செயல்படும் - வக்கார் யூனிஸ்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு சென்று 3 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடவுள்ளது. ஆகஸ்டு 5-ந் தேதி இந்த இரு அணிகள் இடையே முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் தொடங்கவுள்ளது.

தற்போது இந்த போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் கூறுகையில், இங்கிலாந்தில் தற்போது ஆடுகளத்தின் தன்மை மாறி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் எந்தெந்த வீரர்கள் விளையாடுவார்கள் என்பதை இவ்வளவு முன்கூட்டியே சொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார்.

வகார் யூனிஸ்,பாக்கிஸ்தான் அணி,இங்கிலாந்து தொடர்,டெஸ்ட் போட்டி ,Waqar Younis, Pakistan Team, England Series, Test Match

ஆடுகளத்தில் எந்த வீரர்களால் நன்றாக செயல்பட முடியும் என்பதற்கு ஏற்ப நாங்கள் தயாராகுவோம். அப்போதைய தட்பவெப்பநிலை உள்பட எல்லா விஷயங்களையும் கவனிப்போம். 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடும் வாய்ப்பு குறித்தும் சிந்திப்போம் என்று வக்கார் யூனிஸ் கூறியுள்ளார்.

மேலும் அவர், நிச்சயம் எங்கள் அணியின் ஆதரவாளர்களுக்கு ஏமாற்றம் அளிக்கமாட்டோம். எங்கள் திறமையை பயன்படுத்தி பெருமைப்படும் வகையில் செயல்பட முயற்சிப்போம். உடல் தகுதியை பொறுத்தமட்டில் விராட்கோலி உயர்தரமான வீரர். உடல் தகுதியை மேம்படுத்த எங்கள் அணி வீரர்கள் கடுமையாக உழைக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Tags :