Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இங்கிலாந்து தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் தங்களது குடும்பத்தினரை அழைத்து செல்ல தடை

இங்கிலாந்து தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் தங்களது குடும்பத்தினரை அழைத்து செல்ல தடை

By: Karunakaran Wed, 17 June 2020 1:07:48 PM

இங்கிலாந்து தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் தங்களது குடும்பத்தினரை அழைத்து செல்ல தடை

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி விளையாடவுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நிதி நெருக்கடி காரணமாக இந்த போட்டியை நடத்துகிறது. இந்த போட்டியை டி.வி.யில் ஒளிபரப்பு செய்வதன் மூலமாக ரூ.700 கோடி வருவாய் கிடைக்கும்.

இங்கிலாந்து தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கினார். இந்த மாத இறுதியில் இங்கிலாந்துக்கு சிறப்பு விமானத்தில் பாகிஸ்தானின் 29 வீரர்கள் மற்றும் தலைமை பயிற்சியாளர், மருத்துவ அதிகாரி உள்பட 14 உதவியாளர்கள் இங்கிலாந்து செல்லவுள்ளனர். ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தங்களது குடும்பத்தினரை அழைத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

england,pakistan,cricketers,test match,harris socaille ,பாகிஸ்தான் கிரிக்கெட்,இங்கிலாந்து, டெஸ்ட் போட்டி,ஹாரிஸ் சோகைல்

இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் கூறுகையில், கொரோனா முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் வீரர்கள் தங்களது குடும்பத்தினரை உடன் அழைத்து செல்வதற்கு அனுமதி கிடையாது. எங்கள் அணியினர் இங்கிலாந்து சென்றடைந்ததும் அங்கு பர்மிங்காம் நகரில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். உயர்மட்ட மருத்துவ வசதிகளுடன், கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வீரர்கள் 2 வாரம் பயிற்சியில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த தொடரில் இருந்து பேட்ஸ்மேன் ஹாரிஸ் சோகைல் இந்த இங்கிலாந்து பயணத்தில் இருந்து பின்வாங்கியுள்ளார். 2015-ம் ஆண்டு நியூசிலாந்து தொடரின் போது, தான் தங்கியிருந்த ஓட்டலில் ஏதோ உருவத்தை பார்த்து பயந்த அவர், அது முதல் ஒவ்வொரு வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போதும் தனது மனைவியை உடன் அழைத்து செல்வதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் சிறப்பு அனுமதி பெற்றிருந்தார். ஆனால் இந்த முறை புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் அவர் இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.

Tags :