Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பார்த்தீவ் பட்டேலுக்கு மும்பை இந்தியன் அணி நிர்வாகம் அளித்த பதவி

பார்த்தீவ் பட்டேலுக்கு மும்பை இந்தியன் அணி நிர்வாகம் அளித்த பதவி

By: Nagaraj Sun, 13 Dec 2020 8:11:33 PM

பார்த்தீவ் பட்டேலுக்கு மும்பை இந்தியன் அணி நிர்வாகம் அளித்த பதவி

ஓய்வு பெற்ற பார்த்தீவ் பட்டேலுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் திறமைகளை கண்டறியும் குழுவில் பதவி கொடுத்துள்ளது.

பார்தீவ் பட்டேல் இந்திய கிரிக்கெட் அணி வீரரும், இந்தியன் பிரீமியர் லீக் மற்றும் குஜராத் அணிக்காக உள்ளூர் போட்டிகளிலும் விளையாடிய கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் ஐபிஎல் போட்டியினைப் பொறுத்தவரை பெங்களூரு இராயல் சேலஞ்சர்ஸ் அணி சார்பில் கடந்த 2 ஆண்டுகளாக விளையாடி வருகிறார்.

மேலும் இவர் அதிக அளவிலான உள்ளூர் துடுப்பாட்டப் போட்டிகளில் குஜராத் அணிக்காக சிறப்பாக விளையாடியதன் மூலமும் இவருக்கு இந்திய டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, ஒருநாள் சர்வதேசப் போட்டி மற்றும் சர்வதேச டி 20 போட்டி என மூன்று வகையான போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

talents,discovery team,parthiv patel,mumbai indians ,திறமைகள், கண்டறியும் குழு, பார்த்தீவ் படேல், மும்பை இந்தியன்ஸ்

17 வயதில் இந்திய அணிக்காக களம் இறங்கிய பார்த்திவ் படேல் தற்போது அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வினை அறிவித்துள்ளார், அதாவது இவர் இந்திய அணிக்காக 25 டெஸ்ட் போட்டிகள், 28 ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் 2 ஆண்டுகளாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்துவரும் இவர் ட்விட்டரில் சமீபத்தில் தனது ஓய்வுகுறித்த அறிவிப்பினை வெளியிட்டார்.

இந்த நிலையில் பார்த்தீவ் பட்டேலுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியில் திறமைகளை கண்டறியும் குழுவில் பணி கிடைத்துள்ளது.

Tags :