Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் டைட்டில் ஸ்பான்சராக விளம்பர ஒப்பந்தம் செய்ய பதஞ்சலி நிறுவனம் திட்டம்

ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் டைட்டில் ஸ்பான்சராக விளம்பர ஒப்பந்தம் செய்ய பதஞ்சலி நிறுவனம் திட்டம்

By: Karunakaran Mon, 10 Aug 2020 6:06:16 PM

ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டியின் டைட்டில் ஸ்பான்சராக விளம்பர ஒப்பந்தம் செய்ய பதஞ்சலி நிறுவனம் திட்டம்

ஐபிஎல் கிரிக்கெட்டின் 2018 முதல் 2022 வரையிலான டைட்டில் ஸ்பான்சர் உரிமத்தை சீனாவின் விவோ நிறுவனம் பெற்றிருந்தது. தற்போது லடாக் மோதல் விவகாரம் காரணமாக சீனா பொருட்களை நிராகரிக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வருவதால், ஐபிஎல் ஸ்பான்சராக விவோ தொடர்ந்து நீடிக்கும் என்று பிசிசிஐ தெரிவித்ததற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதன் காரணமாக ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்பில் தொடர்பாக போடப்பட்டிருந்த ஒப்பந்தத்தில் இருந்து விவோ நிறுவனமும்-பிசிசிஐ-யும் விலகின. இந்த நடவடிக்கையால் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் டைட்டில் ஸ்பான்சர் யார் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. தற்போது ஐபிஎல் 2020 ஸ்பான்சர் உரிமத்தை வாங்க சாமியார் பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளன.

patanjali,advertising deal,sponsor,ipl 2020 cricket tournament ,பதஞ்சலி, விளம்பர ஒப்பந்தம், ஸ்பான்சர், ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டி

இதுகுறித்து பதஞ்சலி நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ஐபிஎல் ஸ்பான்சர் தொடர்பாக நாங்கள் ஆலோசித்து வருகிறோம். இது தொடர்பான இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்று கூறினார். ஐபிஎல் ஸ்பான்சர்ஷிப்பை பாபா ராம்தேவின் நிறுவனம் பெற்றால், டிஎல்எஃப் ஐபிஎல், விவோ ஐபிஎல் வரிசையில் இனி பதஞ்சலி ஐபிஎல் இணையும்.

பதஞ்சலி நிறுவனம் ஆயுர்வேத பொருட்கள் தொடர்பான விற்பனையை செய்துவருகிறது. இந்நிலையில் பதஞ்சலி நிறுவனத்தின் 2018-19 ஆம் ஆண்டுக்கான வருவாய் 8 ஆயிரத்து 329 கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags :