Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் போடோரோஸ்கா அரைஇறுதிக்கு முன்னேற்றம்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் போடோரோஸ்கா அரைஇறுதிக்கு முன்னேற்றம்

By: Karunakaran Wed, 07 Oct 2020 08:45:27 AM

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் போடோரோஸ்கா அரைஇறுதிக்கு முன்னேற்றம்

பாரீஸ் நகரில் ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் எலினா ஸ்விடோலினா, தகுதி சுற்று மூலம் முன்னேறியவரும், தரவரிசையில் 131-வது இடத்தில் உள்ளவருமான அர்ஜென்டினாவின் நாடியா போடோரோஸ்காவுடன் மோதினார்.

இந்த ஆட்டத்தில் போடோரோஸ்கா 6-2, 6-4 என்ற நேர்செட்டில் ஸ்விடோலினாவுக்கு அதிர்ச்சி அளித்து அரைஇறுதியை எட்டினார். இந்த ஆட்டம் 1 மணி 19 நிமிடம் நடந்தது. இதன் மூலம் போடோரோஸ்கா தகுதி சுற்றின் மூலம் நுழைந்து பிரெஞ்ச் ஓபனில் அரைஇறுதிக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என்ற பெருமையை தன்னுடதையாக்கியுள்ளார்.

podoroska,semifinals,french open tennis tournament,argentina ,போடோரோஸ்கா, அரையிறுதி, பிரஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி, அர்ஜென்டினா

இந்த போட்டியில் 2004-ம் ஆண்டுக்கு பிறகு அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்த முதல் அர்ஜென்டினா வீராங்கனை என்ற சிறப்பையும் தன்வசப்படுத்தினார். மழை காரணமாக தள்ளிவைக்கப்பட்டு நடந்த 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் அமெரிக்க வீராங்கனை டேனியலி காலின்ஸ் 6-4, 4-6, 6-4 என்ற செட் கணக்கில் ஆன்ஸ் ஜாபெரை விரட்டியடித்து முதல்முறையாக கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

இந்நிலையில் பெண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் சூதாட்ட புகார் கிளம்பியுள்ளது. இது குறித்து பிரான்ஸ் அரசு தரப்பில் விசாரணை தொடங்கப்பட்டு இருக்கிறது. இதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு தக்க தண்டனை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :