Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பொல்லார்டுக்கு ஓய்வு... அதிரடி பேட்ஸ்மேன் டிம் டேவிட் அந்த இடத்தை நிரப்புவாராம்

பொல்லார்டுக்கு ஓய்வு... அதிரடி பேட்ஸ்மேன் டிம் டேவிட் அந்த இடத்தை நிரப்புவாராம்

By: Nagaraj Tue, 02 May 2023 09:02:51 AM

பொல்லார்டுக்கு ஓய்வு... அதிரடி பேட்ஸ்மேன் டிம் டேவிட் அந்த இடத்தை நிரப்புவாராம்

மும்பை: அவர் இடத்தில் இவர்... மும்பை அணியில் கிரோன் பொல்லார்டுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும், அவரது இடத்தை அதிரடி பேட்ஸ்மேன் டிம் டேவிட் நிரப்புவார் என்றும் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் யஷஷ்வி ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 62 பந்துகளில் 124 ரன்கள் எடுத்தார். அதன்பிறகு 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி மும்பை பேட்ஸ்மேன்கள் விளையாடினர். சேஸிங்கின் போது மும்பை கேப்டன் ரோகித் சர்மா 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.

mumbai,perumitham,pollard,rohit sharma,team,tim david, ,அணி, டிம் டேவிட், பெருமிதம், பொலார்டு, மும்பை, ரோஹித் சர்மா

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான இஷான் கிஷான் 28 ரன்களுடன் ஆட்டமிழந்தார். கேமரூன் கிரீன் 26 பந்துகளில் 44 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 29 பந்துகளில் 55 ரன்களும் எடுத்ததால் ஆட்டம் விறுவிறுப்பாக மாறியது.

கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரை ராஜஸ்தான் அணி ஹோல்டர் வீசினார். மும்பை இந்தியன்ஸ் அணியின் டிம் டேவிட் இந்த ஓவரின் முதல் 3 பந்துகளை சிக்ஸர்களாக அடித்து ஆட்டத்தை வென்றார். 19.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து மும்பை அணி வெற்றி இலக்கை எட்டியது.

இந்தப் போட்டியில் டிம் டேவிட் 14 பந்துகளில் 45 ரன்கள் எடுத்தார். வெற்றிக்கு பின் மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில், பெரிய ஸ்கோரை சேஸ் செய்து வெற்றி பெற்றதை மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறோம். கடந்த போட்டியில் நாங்கள் வெற்றிக்கு மிக அருகில் வந்து தோற்றோம். மும்பை அணியில் இருந்து பொல்லார்டு வெளியேறியதன் வெற்றிடத்தை டிம் டேவிட் அதை நிரப்புவார் என்று நம்புகிறேன். டேவிட்டிடம் அதற்கான திறமை அதிகம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
|
|