Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • நட்புறவு கால்பந்து போட்டியில் போர்ச்சுக்கல் அணி அபார வெற்றி

நட்புறவு கால்பந்து போட்டியில் போர்ச்சுக்கல் அணி அபார வெற்றி

By: Nagaraj Fri, 13 Nov 2020 09:41:04 AM

நட்புறவு கால்பந்து போட்டியில் போர்ச்சுக்கல் அணி அபார வெற்றி

போர்ச்சுகல் அணி அபார விளையாட்டு... நட்புறவு கால்பந்து போட்டியில் போர்ச்சுக்கல் அணி 7-0 என்ற கோல் கணக்கில் அன்டோராவை பந்தாடியது.

போர்ச்சுக்கல்-அன்டோரா நாட்டு அணிகள் இடையிலான நட்புறவு கால்பந்து போட்டி போர்ச்சுக்கல்லில் நேற்று நடந்தது. இதில் போர்ச்சுக்கல் அணி 7-0 என்ற கோல் கணக்கில் அன்டோராவை பந்தாடியது.

நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 85-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இது ரொனால்டோ அடித்த 102-வது சர்வதேச கோலாகும்.

சர்வதேச கால்பந்து போட்டியில் ஈரான் வீரர் அலி தாய் 109 கோல்கள் அடித்ததே அதிகபட்சமாக உள்ளது. அந்த சாதனையை தகர்க்க ரொனால்டோவுக்கு இன்னும் 8 கோல்கள் மட்டுமே தேவையாகும்.

Tags :