Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஜூனியர் பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி ஒத்திவைப்பு

ஜூனியர் பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி ஒத்திவைப்பு

By: Nagaraj Fri, 25 Sept 2020 10:33:09 AM

ஜூனியர் பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி ஒத்திவைப்பு

17 வயதுக்கு உட்பட்ட ஜூனியர் பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டி வரும் பிப்ரவரி மாதத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு சீனாவில் உருவான கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல நாடுகளிலும் ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டது. கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாத நிலையில், ஊரடங்கினைத் தவிர வேறு எந்தத் தீர்வும் இல்லாத நிலையில் விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன.

சில போட்டிகள் ரத்து செய்யப்பட்டன, அந்த வகையில் 17 வயதுக்கு உட்பட்ட ஜூனியர் பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியானது இந்தியாவில் நவம்பர் 2 ஆம் தேதி துவங்கி நவம்பர் 21 ஆம் தேதி வரை நடைபெற இருந்தது.

junior girls,world cup,february,football tournament ,
ஜூனியர் பெண்கள், உலக கோப்பை, பிப்ரவரி மாதம், கால்பந்து போட்டி

தற்போது கொரோனா பிரச்சினை காரணமாக இந்தப் போட்டியானது தள்ளிவைக்கப்பட்டுள்ளது, இந்த நிலையில் இந்தப் போட்டியானது அடுத்த ஆண்டு பிப்ரவரி 17 ஆம் தேதி முதல் மார்ச் 7 ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாகக் கூறப்படுகின்றது.

அதாவது ஜூனியர் பெண்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியின் தகுதிச் சுற்றுப் போட்டிகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நடத்தப்படவில்லை. அதாவது அனைத்து நாடுகளிலும் உள்ள கட்டுப்பாடுகள் முழுமையாக தளர்த்தப்பட்ட பின்னரே தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடத்தப் பெறும்.

அதன் காரணமாகவே இந்த போட்டி மீண்டும் ஒரு முறை தள்ளிவைக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகின்றது.

Tags :