Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த பிரபாத் ஜெய சூர்யா

அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த பிரபாத் ஜெய சூர்யா

By: Nagaraj Sat, 29 Apr 2023 6:52:17 PM

அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த பிரபாத் ஜெய சூர்யா

காலே: 72 ஆண்டு கால சாதனை முறியடிப்பு... இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா, அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்தி 72 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.

அயர்லாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான நேற்று காலேயில் நடந்த போட்டியில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூர்யா இந்த மைல்கல்லை எட்டினார். அயர்லாந்து பேட்ஸ்மேன் பால் ஸ்டிர்லிங்கை வெளியேற்றியதன் மூலம், பிரபாத் ஜெயசூர்யா, டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் ஆனார்.

cricket,runs,wicket, ,இலங்கை வீரர், ஜெயசூர்யா, 50 விக்கெட்டுகள்

31 வயதான பிரபாத் ஜெயசூர்யா தனது 7வது டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன் 1951-ம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளின் ஆல்ஃப் வாலண்டைன் 8 போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தியதே சாதனையாக இருந்தது. 72 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபாத் ஜெயசூர்யா இதை முறியடித்துள்ளார்.

ஒட்டுமொத்த டெஸ்ட் அரங்கில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் சார்லி டர்னர் முதலிடத்தில் உள்ளார். 1888ல் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இந்த சாதனையை நிகழ்த்தினார்.

இந்தப் பிரிவில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டாம் ரிச்சர்ட்சன் மற்றும் தென்னாப்பிரிக்காவின் வெர்னான் பிலாண்டர் ஆகியோருடன் பிரபாத் ஜெயசூர்யா 2வது இடத்தைப் பகிர்ந்து கொண்டார். மேலும் 7 டெஸ்ட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வேட்டையாடியுள்ளனர்.

Tags :
|
|