Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பெங்களூர் அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி

பெங்களூர் அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி

By: Karunakaran Fri, 25 Sept 2020 1:36:25 PM

பெங்களூர் அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி

நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட்டின் 6-வது போட்டியில் பஞ்சாப் - பெங்களூர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கேஎல் ராகுலில் அபார சதத்தால் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது,

207 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தேவ்தத் படிக்கல் - ஆரோன் பிஞ்ச் ஜோடி களம் இறங்கியது. விராட் கோலி 1 ரன் எடுத்த நிலையில் 3-வது ஓவரின் 4-வது பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் 4 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. ஆர்சிபி 8.2 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்து திணறியது.

punjab,bangalore,97 runs,k l ragul ,பஞ்சாப், பெங்களூர், 97 ரன்கள், கே எல் ராகுல்

சுந்தர் 27 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததையடுத்து பெங்களூர் அணி 17 ஓவர்கள் முடிவிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 97 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அபார வெற்றி பெற்றது.

பஞ்சாப் அணியின் முருகன் அஸ்வின் மற்றும் ரவி பிஷோனி தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தனர். 69 பந்துகளில் 7 சிக்சர்கள் 14 பவுண்டரிகள் உள்பட 132 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் கேஎல் ராகுல் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார்.

Tags :
|