Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் சிறந்த வீரராக குயிண்டன் டி காக் தேர்வு

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் சிறந்த வீரராக குயிண்டன் டி காக் தேர்வு

By: Karunakaran Sun, 05 July 2020 4:58:13 PM

தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் சிறந்த வீரராக குயிண்டன் டி காக் தேர்வு

தென்ஆப்பிரிக்காவில் கிரிக்கெட்டில் சாதித்தவர்களுக்கு தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் போர்டால் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான விழா கொரோனா வைரஸ் காரணமாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெற்றது.

இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் இந்த ஆண்டிற்கான சிறந்த வீரராகவும், சிறந்த டெஸ்ட் வீரராகவும் குயிண்டன் டி காக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒயிட் பால் கிரிக்கெட் அணியின் கேப்டன் டி காக் சிறந்த வீரராகவும், டெஸ்ட் கிரிக்கெட்டின் சிறந்த வீரராகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

quinton de kock,south africa,best player,test player ,குயின்டன் டி கோக், தென்னாப்பிரிக்கா, சிறந்த வீரர், டெஸ்ட் பிளேயர்

தென்ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட்டில் 21 வயதாக லாரா வால்வார்த்ட் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். தென்ஆப்பிரிக்கா கிரிக்கெட்டின் இந்த ஆண்டிற்கான சிறந்த வீரராக குயிண்டன் டி காக் தேர்வு செய்யப்பட்டது இரண்டாவது முறையாகும்.

டி காக் 2-வது முறையாக சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார். இந்த விருதை இதற்கு முன் கல்லீஸ் 2004, 2011 ஆண்டிலும், நிதினி 2005, 2006 ஆண்டிலும், அம்லா 2010, 2013 ஆண்டிலும், டி வில்லியர்ஸ் 2014, 2015 ஆண்டிலும், ரபடா 2016, 2018 ஆண்டுகளில் இரண்டு முறை இந்த விருதை பெற்றுள்ளனர். தற்போது டி காக் இந்த விருதை இரண்டு முறை வென்றுள்ளார்.


Tags :