Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் ரபேல் நடால், டொமினிக் தீம், வாரிங்கா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் ரபேல் நடால், டொமினிக் தீம், வாரிங்கா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

By: Karunakaran Thu, 01 Oct 2020 2:59:40 PM

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் ரபேல் நடால், டொமினிக் தீம், வாரிங்கா 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்

கொரோனா பரவலுக்கு மத்தியில் ரசிகர்கள் இன்றி பிரெஞ்ச் ஒபன் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பிரெஞ்ச் ஒபன் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் 2-ம் நிலை வீரரான ரபேல் நடால் அமெரிக்காவின் மெக்டொனால்டை எதிர்கொண்டார். நடாலின் ஆட்டத்திற்கு மெக்டொனால்டால் ஈடுகொடுக்க முடியவில்லை.

இதனால் நடால் 6-1, 6-0, 6-3 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு சுற்றில் 3-ம் நிலை வீரரான டொமினிக் தீம் அமெரிக்காவின் ஜேக் சோக்கை எதிர்கொண்டார். முதல் இரண்டு செட்டையும் டொமினிக் தீம் 6-1, 6-3 என நேர்செட் கணக்கில் கைப்பற்றினார். ஆனால் 3-வது சுற்றில் ஜேக் சற்று நெருக்கடி கொடுத்தார்.

rafael nadal,dominic theme,waringa,french open tennis ,ரஃபேல் நடால், டொமினிக் தீம், வாரிங்கா, பிரஞ்சு ஓபன் டென்னிஸ்

3வது செட் டை பிரேக்கர் வரை சென்றது. இறுதியில் டொமினிக் தீம் 7(8), 6(6) எனக் கைப்பற்றி வெற்றி பெற்றார். 16-ம் நிலை வீரரான வாரிங்கா ஜெர்மனியின் கோப்ஃபெர்-ஐ எதிர்கொண்டார். இதில் வாரிங்கா 6-3, 6-2, 3-6, 6-1 என வெற்றி பெற்றார். தரநிலையில் 21-ம் இடத்தில் இருக்கும் அமெரிக்காவின் இஸ்னெர் சக நாட்டு வீரரான கோர்டாவிடம் 4-6, 4-6, 6-2, 4-6 என வீழ்ந்தார்.

இதனால் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் ரபேல் நடால், டொமினிக் தீம், வாரிங்கா 3-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இஸ்னெர் தோல்வியடைந்துள்ளார். பிரெஞ்ச் ஒபன் போட்டியில் கொரோனா காரணமாக பல வீரர்கள் விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags :