Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கியதற்கு ரபேல் நடால் கடும் எதிர்ப்பு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கியதற்கு ரபேல் நடால் கடும் எதிர்ப்பு

By: Karunakaran Tue, 15 Sept 2020 4:40:03 PM

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கியதற்கு ரபேல் நடால் கடும் எதிர்ப்பு

ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் மற்றும் அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட் சிலாம் டென்னிஸ் போட்டி நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஜோகோவிச்சும், பெண்கள் பிரிவில் சோபியா கெனினும் சாம்பியன் பட்டம் பெற்றனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக விம்பிள்டன் போட்டி ரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனாவுக்கு மத்தியில் நடைபெற்ற அமெரிக்க ஓபனில் ஆண்கள் பிரிவில் டொமினிக் தீமும், பெண்கள் பிரிவில் நமோமி ஒசாகாவும் சாம்பியன் பட்டம் பெற்றனர். மே மாதம் நடைபெற இருந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி கொரோனா வைரஸ் காரணமாக செப்டம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டு, வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது.

rafael nadal,fans,french open tennis tournament,opposes ,Rafael Nadal, Pauls, French Open Tennis Tournament, Opposition

நடந்து முடிந்த அமெரிக்க ஓபனில் ரசிகர்கள் இல்லாமல் காலி மைதானத்தில் போட்டி நடந்தது. இந்நிலையில் பிரெஞ்சு ஓபன் போட்டியை பார்க்க ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரெஞ்சு ஓபன் போட்டியில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கியதற்கு நடால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கொரோனா மருத்துவ தடுப்பு பாதுகாப்பில் ரசிகர்களை அனுமதிப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என நடால் கவலை தெரிவித்துள்ளார். அவரது இந்த எதிர்ப்பு காரணமாக போட்டி அமைப்பாளர்கள் ரசிகர்களுக்கு அனுமதியை மறுப்பார்களா? என எதிர்பார்க்கப்படுகிறது. 34 வயதான நடால் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 12 தடவை கைப்பற்றி சாதனை புரிந்துள்ளார்.

Tags :
|