Advertisement

வில்லன் ஆன மழை... ஒரு நாள் போட்டி ஓவர்கள் குறைக்கப்பட்டன

By: Nagaraj Sun, 27 Nov 2022 6:29:44 PM

வில்லன் ஆன மழை... ஒரு நாள் போட்டி ஓவர்கள் குறைக்கப்பட்டன

ஹாமில்டன்: வில்லன் ஆன மழை... இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 2வது ஒருநாள் போட்டி ஹாமில்டனில் இன்று நடந்தது. டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் சுப்மன்கில் களமிறங்கினர். இந்திய அணி 4.5 ஓவரில் 22 ரன்கள் எடுத்திருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் சிறிது இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியது.

hamilton,india and new zealand,shikar dhawan, ,ஒருநாள் போட்டி, மழை, ஹாமில்டன்

சுமார் 4 மணி நேரம் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் ஆட்டம் 29 ஓவர்களாக (ஒரு அணிக்கு) குறைக்கப்பட்டதாக நடுவர்கள் அறிவித்தனர்.


இதன்படி 29 ஓவர்கள் கொண்ட இந்த போட்டியில் இரு அணிகளுக்கும் 10 நிமிட உணவு இடைவேளை அளிக்கப்படுகிறது. குடிநீர் இடைவேளை வழங்கப்பட மாட்டாது என்றும் கூறப்படுகிறது.

Tags :