Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபார வெற்றி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபார வெற்றி

By: Karunakaran Wed, 23 Sept 2020 2:37:03 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபார வெற்றி

சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஷார்ஜாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 216 ரன்கள் குவித்தது. பின்னர் 217 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முரளி விஜய், வாட்சன் ஆகியோர் களம் இறங்கினர்.

வாட்சன் 21 பந்தில் 4 சிக்சர், ஒரு பவுண்டரியுடன் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். வாட்சன் ஆட்டமிழந்த அடுத்த ஓவரில் முரளி விஜய் 21 பந்தில் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் 7.3 ஓவரில் 58 ரன்கள் எடுப்பதற்குள் தொடக்க ஜோடியை இழந்தது. அடுத்து டு பிளிஸ்சிஸ் உடன் சாம் கர்ரன் ஜோடி சேர்ந்தார். கர்ரன் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரியுடன் 6 பந்தில் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

rajasthan,chennai super kings,16 runs,ipl ,ராஜஸ்தான், சென்னை சூப்பர் கிங்ஸ், 16 ரன்கள், ஐ.பி.எல்

சென்னை சூப்பர் கிங்ஸ் 9 ஓவரில 77 ரன்கள் எடுப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு டு பிளிஸ்சிஸ் உடன் கேதர் ஜாதவ் ஜோடி சேர்ந்தனர். 16 பந்துகளில் 22 ரன்கள் எடுத்திருந்த ஜாதவ் டாம் கரன் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய டு பிளஸ்சிஸ் 37 பந்துகளில் 7 சிக்சர்கள் உள்பட 72 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 200 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், சென்னை அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் டோனி 16 பந்துகளில் 3 சிக்சர்கள் உள்பட 29 ரன்களுடனும், ஜடேஜா 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

Tags :