Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பெங்களூருக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

பெங்களூருக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

By: Karunakaran Sat, 03 Oct 2020 4:51:42 PM

பெங்களூருக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

13-வது ஐபிஎல் தொடரில் இன்று முதன் முறையாக இரண்டு ஆட்டங்கள் நடைபெறுகின்றன. அதன்படி முதல் ஆட்டம் 3.30 மணிக்கு தொடங்கியது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் 3 மணிக்கு சுண்டப்பட்டது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்மித டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், 1. பட்லர், 2. ஸ்மித், 3. சஞ்சு சாம்சன், 4. ராபின் உத்தப்பா, 5. ரியான் பராக், 6. ராகுல் டெவாட்டியர், 7. மஹிபால் லாம்ரோர், 8. டாம் கர்ரன், 9. ஷ்ரேயாஸ் கோபால், 10. ஜாஃப்ரா ஆர்சர், 11. ஜெய்தேவ் உனத்கட் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

rajasthan royals,toss,batting,bangalore ,ராஜஸ்தான் ராயல்ஸ், டாஸ், பேட்டிங், பெங்களூர்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில், 1. தேவ்தத் படிக்கல், 2. ஆரோன் பிஞ்ச், 3. விராட் கோலி, 4. டி வில்லியர்ஸ், 5. ஷிவம் டுபே, 6. குர்கீரத் சிங் மன், 7. வாஷிங்டன் சுந்தர், 8. இசுரு உடானா, 9. நவ்தீப் சைனி, 10. ஆடம் ஜம்பா, 11. சாஹல் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ள ஆட்டத்தில் கல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த முறை ஐபிஎல் சீசனில் மோதுகின்ற அணைத்து அணிகளும் தலா ஒரு முறை வென்றுள்ளன. சில அணிகள் 2 வெற்றியை பதிவு செய்துள்ளன. இதனால் அனைத்து அணிகளும் வெற்றி பெற தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

Tags :
|