Advertisement

தமிழில் மாஸ் டயலாக் பேசிய ரவீந்திர ஜடேஜா

By: Nagaraj Sun, 19 Nov 2023 7:57:51 PM

தமிழில் மாஸ் டயலாக் பேசிய ரவீந்திர ஜடேஜா

மும்பை: "கப்பை தூக்குறோம்" "அடி அடினு அடிக்கிறோம்" என்ற தமிழில் பேசி அசத்தி உள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ஜடேஜா. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
கடந்த மாதம் 5-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற உலகக் கோப்பை போட்டி, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவும், 2 முறை சாம்பியனான இந்தியாவும் மோதும் இந்த இறுதி ஆட்டம் உலக கிரிக்கெட் ரசிகா்களுக்கு விருந்தளிக்கப் போகிறது.

Tags :
|
|