Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • 2016 சீசனுக்குப் பிறகு முதல் போட்டியில் வெற்றியை ருசித்த ஆர்சிபி

2016 சீசனுக்குப் பிறகு முதல் போட்டியில் வெற்றியை ருசித்த ஆர்சிபி

By: Karunakaran Tue, 22 Sept 2020 2:11:21 PM

2016 சீசனுக்குப் பிறகு முதல் போட்டியில் வெற்றியை ருசித்த ஆர்சிபி

13-வது ஐபிஎல் 2020 கிரிக்கெட்டின் 3-வது போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி கேப்டன் டேவிட் வார்னர் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களமிறங்கியது.

பெங்களூர் அணியில் தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். சிறப்பாக விளையாடிய டி வில்லியரஸ் 30 பந்தில் 51 ரன்கள் எடுத்தார். இதனால் பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்தது. 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் டேவிட் வார்னர், ஜானி பிரிஸ்டோ களமிறங்கினர்.

rcb,first match,2016 season,ipl ,ஆர்.சி.பி., முதல் போட்டி, 2016 சீசன், ஐ.பி.எல்

இறுதியாக கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவை என்ற நிலையில் 9 விக்கெட்டுகளை இழந்து ஐதராபாத் திணறியது. 19.4 ஓவரில் டெயில் ஸ்டெயின் வீசிய பந்தை சந்தீப் சர்மா சிக்ஸ் அடிக்க முயன்று பவுண்டரி லைனில் நின்றுகொண்டிருந்த விராட் கோலி கேட்ச் பிடித்தார். இதனால், ஐதராபாத் அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் ஐதராபாத் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 2016 சீசனுக்குப் பிறகு முதல் போட்டியில் வெற்றியை ருசித்துள்ளது. ஆர்.சி.பி. அணியின் வெற்றிக்கு இளம் தொடக்க வீரரான தேவ்தத் படிக்கல், ஏபி டி வில்லியர்ஸ் ஆகியோரின் பேட்டிங்கும் சாஹல், நவ்தீப் சைனியின் பந்து வீச்சும் முக்கிய காரணமாக அமைந்தது.

Tags :
|