Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • டெஸ்ட் தொடருக்கு புத்துணர்ச்சியுடன் தயாராகும் பொருட்டு 20 ஓவர் தொடரில் கேன் வில்லியம்சனுக்கு ஓய்வு

டெஸ்ட் தொடருக்கு புத்துணர்ச்சியுடன் தயாராகும் பொருட்டு 20 ஓவர் தொடரில் கேன் வில்லியம்சனுக்கு ஓய்வு

By: Karunakaran Wed, 18 Nov 2020 2:18:10 PM

டெஸ்ட் தொடருக்கு புத்துணர்ச்சியுடன் தயாராகும் பொருட்டு 20 ஓவர் தொடரில் கேன் வில்லியம்சனுக்கு ஓய்வு

நியூசிலாந்து சென்று இருக்கும் வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணியுடன் மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. நியூசிலாந்து-வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 27-ந் தேதி ஆக்லாந்தில் நடக்கிறது. 2-வது, 3-வது 20 ஓவர் போட்டி மவுன்ட் மாங்கானுவில் முறையே வருகிற 29 மற்றும் 30-ந் தேதிகளில் நடைபெறுகிறது.

இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் ஹாமில்டனில் டிசம்பர் 3-ந் தேதியும், 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வெலிங்டனில் டிசம்பர் 11-ந் தேதியும் தொடங்குகிறது. வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான போட்டி தொடருக்கான நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

retirement,kane williamson,20-over series,test series ,ஓய்வு, கேன் வில்லியம்சன், 20 ஓவர் தொடர், டெஸ்ட் தொடர்

ஐ.பி.எல். போட்டியில் விளையாடிய கேப்டன் கேன் வில்லியம்சன், வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் ஆகியோர் டெஸ்ட் தொடருக்கு புத்துணர்ச்சியுடன் தயாராகும் பொருட்டு 20 ஓவர் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தென்ஆப்பிரிக்காவில் பிறந்து நியூசிலாந்தில் குடியேறியவரான தேவோன் கான்வே அறிமுக வீரராக நியூசிலாந்து அணியில் இடம் பிடித்துள்ளார்.

உள்ளூர் போட்டியில் அசத்தியன் மூலம் அவர் தேசிய அணிக்கு தேர்வாகி இருக்கிறார். இதேபோல் வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜாமிசன் முதல்முறையாக 20 ஓவர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். 20 ஓவர் போட்டியில் வில்லியம்சன் விளையாடாததால் டிம் சவுதி கேப்டன் பொறுப்பை கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வில்லியம்சன் தலைமையிலான டெஸ்ட் அணியில் பெரும்பாலான வீரர்கள் மாற்றமின்றி தொடருகின்றனர்.

Tags :