Advertisement

இன்றைய ஐபிஎல் போட்டியில் பழித்தீர்க்கும் ராஜஸ்தான் அணி

By: Nagaraj Wed, 14 Oct 2020 7:46:22 PM

இன்றைய ஐபிஎல் போட்டியில் பழித்தீர்க்கும் ராஜஸ்தான் அணி

ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் டெல்லி அணியை பழித் தீர்க்குமா ராஜஸ்தான் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

துபாயில் நடைபெற உள்ள இப்போட்டி, இந்திய நேரப்படி 7.30 மணிக்கு தொடங்க உள்ளது. நடப்பு தொடரில், 5 வெற்றிகளுடன் டெல்லி அணி புள்ளிப் பட்டியலில் 2வது இடத்திலும், 3 வெற்றிகளுடன் ராஜஸ்தான் அணி 7வது இடத்திலும் உள்ளது.

delhi team,rajasthan team,ipl. competition,conflict ,டெல்லி அணி, ராஜஸ்தான் அணி, ஐ.பி.எல். போட்டி, மோதல்

முன்னதாக நடைபெற்ற லீக் ஆட்டத்தில், டெல்லி அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி உள்ளது. இதற்கு பழி வாங்கும் நோக்கில் ராஜஸ்தான் களமிறங்கும் நிலையில், டெல்லி அணி வீரர் ரிஷப் பண்ட் காயம் காரணமாக இன்றைய போட்டியிலும் பங்கேற்கமாட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த போட்டியில் டெல்லி அணியை பழித்தீர்க்குமா என்று ராஜஸ்தான் அணி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதற்கேற்ப போட்டியில் அதிரடியை காண்பிக்குமா ராஜஸ்தான்.

Tags :