Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • உலகக் கோப்பை வரலாற்றில் 50 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமை படைத்தார் ரோஹித் ஷர்மா

உலகக் கோப்பை வரலாற்றில் 50 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமை படைத்தார் ரோஹித் ஷர்மா

By: vaithegi Wed, 15 Nov 2023 4:16:50 PM

உலகக் கோப்பை வரலாற்றில் 50 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்ற பெருமை படைத்தார்  ரோஹித் ஷர்மா

நடப்பு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரின் முதல் அரையிறுதி போட்டியானது, இன்று நடைபெற்று வருகிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகள் பலப்பரீச்சை செய்து கொண்டு வருகின்றன.

இதையடுத்து இந்த போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. இதனால் இந்திய அணியில் முதலில் அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, சுப்மன் கில் ஜோடி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கி விளையாடினார்கள். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை கூடும் வகையில் ஆரம்பம் முதலே இருவரும் அதிரடியாக விளையாடினார்கள்.

ரோஹித் ஷர்மா பவர் பிளேவில் அதிரடியாகவும் கவனமாகவும் விளையாடி சிக்ஸர்கள் மற்றும் பௌண்டரிகளைக் பறக்கவிட்டார். சுப்மன் கில் நிதானமாக விளையாடி வருகிறார். இதையடுத்து தொடர்ந்து விளையாடிய ரோஹித் ஷர்மா 8.2-வது ஓவரில் டிம் சவுத்தி வீசிய பந்தில், வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.

rohit sharma,world cup ,ரோஹித் ஷர்மா ,உலகக் கோப்பை

ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்திருந்தாலும் அதே நேரத்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களை அடித்தார். இது அவரது சாதனைகளுக்கு வழிவகுத்தது. எனவே அதன்படி, 4.2 வது ஓவரில் போல்ட் வீசிய பந்தை, மைதானத்திற்கு வெளியே பறக்க விட்டு சிக்ஸரை அடித்தார்.

இந்த சிக்ஸரை அடித்ததன் மூலம், நடப்பு உலகக்கோப்பையில் 27 சிக்ஸர்களைப் பதிவு செய்த ரோஹித் ஷர்மா, ஒருநாள் உலகக் கோப்பையின் ஒரே சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இதனால், ஒரே உலக கோப்பைத் தொடரில் 26 சிக்ஸர்கள் அடித்த கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடித்தார். நடப்புத் தொடரில் 28 சிக்ஸர்களை அடித்து உள்ளார் ரோஹித் ஷர்மா.

Tags :