Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • அதிக சிக்ஸர் அடித்த பட்டியலில் 3ம் இடத்தை பிடித்துள்ளார் ரோகித் ஷர்மா

அதிக சிக்ஸர் அடித்த பட்டியலில் 3ம் இடத்தை பிடித்துள்ளார் ரோகித் ஷர்மா

By: vaithegi Sun, 15 Oct 2023 3:04:59 PM

அதிக சிக்ஸர் அடித்த பட்டியலில் 3ம் இடத்தை பிடித்துள்ளார் ரோகித் ஷர்மா

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணியினரை பலமாக வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்திருக்கிறது. இந்த நிலையில், தொடர்ந்து 3 ஆட்டத்தில் இந்திய அணியினர் வெற்றி பெற்றதால் புள்ளி பட்டியலில் முதலிடம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியினர் 42.5 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்து 191 ரன்னிலேயே ஆல் அவுட் ஆனது. இதன் பின், களமிறங்கிய இந்திய அணியினர் 30.3 ஓவர்களிலேயே ஆட்டத்தை முடித்தனர்.

rohit sharma,six ,ரோகித் ஷர்மா,சிக்ஸர்

கடந்த லீக் போட்டியில் ரோகித் ஷர்மா சதம் அடித்ததை போல இந்த லீக் போட்டியிலும் சதம் அடிப்பாரா என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரோகித் சர்மா 63 பந்தில் 86 ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். மேலும், இப்போட்டியில் 6 சிக்ஸர்களை அடித்து உள்ளார். எனவே இதன் மூலமாக ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

அதாவது ஒரு நாள் போட்டிகளில் 300 சிக்ஸர்களை அடித்த 3-வது வீரர் என்கிற சாதனையை ரோகித் சர்மா பெற்றுள்ளார். இப்பட்டியலில் பாகிஸ்தான் வீரர் 351 சிக்ஸர்களை பெற்று முதலிடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணிய சார்ந்த கிரிக்கெட் வீரர் 331 சிக்ஸர்களை பெற்று 2-ம் இடத்திலும் உள்ள நிலையில் தற்போது 300 சிக்ஸர்களை பெற்று 3-ம் இடத்தை ரோகித் சர்மா பிடித்துள்ளார்.

Tags :