Advertisement

சர்வதேச கோல் எண்ணிக்கை 100-ஐ தொட்டு சாதனைப்படைத்த ரொனால்டோ

By: Karunakaran Thu, 10 Sept 2020 09:29:19 AM

சர்வதேச கோல் எண்ணிக்கை 100-ஐ தொட்டு சாதனைப்படைத்த ரொனால்டோ

உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனா காரணமாக பல்வேறு விளையாட்டு போட்டிகள் ஒத்தி மற்றும் தள்ளி வைக்கப்பட்டன. இந்நிலையில் தற்போது மீண்டும் பல்வேறு போட்டிகள் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் நடக்கிறது. ரசிகர்கள் இன்றி விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு சார்பில் நேஷன்ஸ் லீக் சர்வதேச கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் குரூப்3-ல் இடம் பெற்றுள்ள நடப்பு சாம்பியன் போர்ச்சுகல் அணி சோல்னா நகரில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் உள்ளூர் அணியான சுவீடனை 2-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது.

ronaldo,international goals,swedan,football ,ரொனால்டோ, சர்வதேச இலக்குகள், ஸ்வேடன், கால்பந்து

இந்த இரு கோல்களையும் போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ 45-வது மற்றும் 72-வது நிமிடத்தில் அடித்தார். ‘பிரிகிக்’ வாய்ப்பில் முதலாவது கோலை அடித்த போது அவரது ஒட்டுமொத்த சர்வதேச கோல் எண்ணிக்கை 100-ஐ 165 ஆட்டத்தில் தொட்டது.

இந்த மைல்கல்லை எட்டிய முதல் ஐரோப்பிய வீரர் என்ற மகத்தான சாதனையை 35 வயதான ரொனால்டோ படைத்துள்ளார். உலக அளவில் ஈரான் முன்னாள் வீரர் அலி டாய் 109 கோல்கள் அடித்ததே சாதனையாக உள்ளது. இந்த சாதனையை ரொனால்டோ விரைவில் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags :
|