Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • 4-வது வெற்றிக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை

4-வது வெற்றிக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை

By: Karunakaran Mon, 05 Oct 2020 5:50:57 PM

4-வது வெற்றிக்காக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை

13-வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், அபு தாபி, சார்ஜாவில் நடைபெற்று வருகிறது. துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கவுள்ள 19-வது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் 3 வெற்றி, 1 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளன.

4-வது வெற்றியை பெறப்போவது எந்த அணி என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறும். பெங்களூர் அணி தொடக்க ஆட்டத்தில் ஐதராபாத்தை 10 ரன்னில் வென்றது. 2-வது போட்டியில் பஞ்சாபிடம் 97 ரன்னில் மோசமாக தோற்றது. 3-வது போட்டியில் மும்பையை சூப்பர் ஓவரில் வீழ்த்தியது. 4-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை 8 விக்கெட்டில் வென்றது.

royal challengers bangalore,delhi capitals,ipl,4th win ,ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், டெல்லி தலைநகரங்கள், ஐபிஎல், 4 வது வெற்றி

பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி நல்ல நிலைக்கு திரும்பியுள்ளார். முதல் 3 ஆட்டத்தில் சொதப்பிய அவர் ராஜஸ்தானுக்கு எதிராக 72 ரன் எடுத்தார். டெல்லி அணி முதல் 2 ஆட்டங்களில் பஞ்சாப் (சூப்பர் ஓவர்), சென்னையை வீழ்த்தியது. 3-வது போட்டியில் ஐதராபாத்திடம் 15 ரன்னில் தோற்றது. 4-வது ஆட்டத்தில் கொல்கத்தாவை தோற்கடித்தது. டெல்லி அணியில் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர், பிரித்வி ஷா, ரி‌ஷப் பண்ட், ஸ்டாய்னிஸ், தவான் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

பெங்களூர் அணியில் டி வில்லியர்ஸ், ஆரோன் பிஞ்ச், படிக்கல், ஷிவம் துபே, சாஹல் போன்ற சிறந்த வீரர்களும் பெங்களூர் அணியில் உள்ளனர். டெல்லி அணியில் ரபடா, ஆன்ரிச் நோர்ஜ், அமித் மிஸ்ரா போன்ற சிறந்த பந்துவீச்சாளர்களும் உள்ளனர். பெங்களூர் அணியும், டெல்லி அணியும் 4-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளன. இரு அணிகளும் மோதிய ஆட்டத்தில் பெங்களூர் 14-ல், டெல்லி 8-ல் வெற்றி பெற்றுள்ளது.

Tags :
|