Advertisement

ரூ.1 லட்சம் கோடி வருமானம் இழப்பு; பிபா அறிவிப்பு

By: Nagaraj Fri, 18 Sept 2020 5:32:22 PM

ரூ.1 லட்சம் கோடி வருமானம் இழப்பு; பிபா அறிவிப்பு

கிளப் மற்றும் சர்வதேச கால்பந்து போட்டிகளின் மூலம் கிடைக்கும் வருவாயில் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பிபா அறிவித்து உள்ளது.

2019 ஆம் ஆண்டு சீனாவின் ஊகான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளிலும் பரவி மக்களின் இயல்பு வாழ்க்கையினைப் பாதித்தது. கொரோனாவுக்கு மருந்துகள் ஏதும் கண்டுபிடிக்காததால் பல லட்சக்கணக்கிலானோர் கொரொனாவால் உயிர் இழந்தனர்.

வளர்ந்த நாடுகளும் கொரொனாவைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் திணறிய நிலையில் அனைத்து நாடுகளுக்கும் இருந்த ஒரே தீர்வு ஊரடங்கு மட்டும்தான். இதனால் உலகின் பலநாடுகளில் ஊரடங்கு அமலுக்கு வர, டோக்கியோ ஒலிம்பிக், டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட், டென்னீஸ் மற்றும் கால்பந்து போட்டிகள் என எதுவும் நடத்தப் பெறவில்லை.

club matches,fifa,corona relief,committee,football ,கிளப் போட்டிகள், பிபா, கொரோனா நிவாரணம், கமிட்டி, கால்பந்து

கொரோனாவின் தாக்கம் குறைந்ததனால் தற்போது போட்டிகள் மீண்டும் நடைபெற்று வருகின்றன. ஏறக்குறைய 4 மாதங்களுக்குப் பின்னர் போட்டிகள் துவங்கப்பட்ட சூழ்நிலையில் வீரர்கள் பயோ பபுள் முறையினைக் கடைபிடித்து போட்டியில் பங்கேற்று வருகின்றனர்.

இதனால் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் கிளப் மற்றும் சர்வதேச கால்பந்து போட்டிகளின் மூலம் கிடைக்கும் வருவாயில் ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பிபா அறிவித்து உள்ளது.

அதாவது வழக்கமாக கிளப் போட்டிகளின் மூலம் ஆண்டுக்கு ரூ.3 லட்சம் கோடி வருவாய் வந்தநிலையில் இது பெரும் இழப்பு என்று பிபா கொரோனா நிவாரண திட்டத்திற்கான கமிட்டியின் சேர்மன் ஆலி ரென் கூறியுள்ளார்.

Tags :
|