Advertisement

விளம்பர படப்பிடிப்பிற்காக இணைந்த சச்சின், தோனி

By: Nagaraj Thu, 06 Oct 2022 8:57:55 PM

விளம்பர படப்பிடிப்பிற்காக இணைந்த சச்சின், தோனி

மும்பை: விளம்பர படப்பிடிப்பிற்காக சச்சினும் தோனியும் டென்னிஸ் மைதானத்தில் இணைந்துள்ளனர். இருவரும் சாதாரண டி-சர்ட் அணிந்துள்ளனர். இவர்கள் ஒன்றாக இருக்கும் இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


விளம்பர குழுவினர் கூறியதை இருவரும் கூர்ந்து கவனித்துள்ளனர்.
இவர்கள் இருவரும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஆத்மார்த்தமான அன்பை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருமே டென்னிஸ் விளையாட்டை விரும்புகிறார்கள். சமீபத்தில் நடந்த அமெரிக்க ஓபன் போட்டியை தோனி நேரில் பார்த்தார்.

casual t-shirts,indian cricket legends sachin and dhoni,social-media,tennis , கிரிக்கெட், சச்சின், டென்னிஸ், தோனி

விம்பிள்டன் உட்பட இங்கிலாந்தில் நடக்கும் எந்த டென்னிஸ் தொடரையும் சச்சினோ தவறவிடுவதில்லை. முன்னதாக தோனி கபில்தேவுடன் கோல்ப் விளையாடினார். அந்த செய்தியும் வைரலானது. வரும் 2023 ஐபிஎல் தொடரில் தோனி பங்கேற்க உள்ளார்.


அதன் மூலம் மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்ப உள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த சாலை பாதுகாப்பு உலக கிரிக்கெட் தொடரில் சச்சின் பங்கேற்றார். இந்த தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.

Tags :