Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • மும்பை அணிக்கு எதிராக கொல்கத்தா அணிக்கு பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை - சச்சின்

மும்பை அணிக்கு எதிராக கொல்கத்தா அணிக்கு பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை - சச்சின்

By: Karunakaran Thu, 24 Sept 2020 6:51:25 PM

மும்பை அணிக்கு எதிராக கொல்கத்தா அணிக்கு பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை - சச்சின்

அபு தாபியில் நடைபெற்ற 13-வது ஐபில் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 195 ரன்கள் குவித்தது.

மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோகித் சர்மா 80 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 47 ரன்களும் விளாசினர்.196 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அடுத்து கொல்கத்தா அணி களமிறங்கியது. ஆனால் அந்த அணியால் 146 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் 49 ரன்னில் தோல்வியை சந்தித்தது.

sachin tendulkar,partnership,kolkata,mumbai ,சச்சின் டெண்டுல்கர், பார்ட்னர்ஷிப், கொல்கத்தா, மும்பை

கொல்கத்தா அணியில் ஷுப்மான் கில், தினேஷ் கார்த்திக், ரஸல், மோர்கன், நிதிஷ் ராணா என தலைசிறந்த வீரர்கள் இருந்த போதிலும் ஆட்டத்தில் விறுவிறுப்பு இல்லாமல் போனது. இந்நிலையில் மிரட்டலான பார்ட்னர்ஷிப் இல்லாததுதான் தோல்விக்கு காரணம் என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சச்சின் கூறுகையில், மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். ராகுல் சாஹர், பொல்லார்ட் சப்போர்ட் சிறப்பாக இருந்தது. எந்தவொரு கட்டத்திலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மிரட்டும் வகையிலான பார்ட்னர்ஷிப்பை உருவாக்கியதை பார்க்க முடியவில்லை என்று கூறினார்.

Tags :