Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • அர்ஜென்டினாவை அலறவிட்ட சவுதி அரேபியா கால்பந்து அணி... தேசிய விடுமுறை அறிவிப்பு

அர்ஜென்டினாவை அலறவிட்ட சவுதி அரேபியா கால்பந்து அணி... தேசிய விடுமுறை அறிவிப்பு

By: Nagaraj Wed, 23 Nov 2022 3:36:42 PM

அர்ஜென்டினாவை அலறவிட்ட சவுதி அரேபியா கால்பந்து அணி... தேசிய விடுமுறை அறிவிப்பு

கத்தார்: உலக கால்பந்து போட்டியில் லீக் சுற்றில் சவுதி அரேபியா வெற்றிப் பெற்றதை கொண்டாடும் விதமாக சவுதி அரசு இன்று தேசிய விடுமுறை அறிவித்துள்ளது.

உலகக் கோப்பை கால்பந்து தொடர் 2022, கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் லீக் சுற்றில் நேற்று மெஸ்சியின் அர்ஜெண்டினா அணி, சவுதி அரேபியா அணியை எதிர்கொண்டது. லுசைல் மைதானத்தில் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் 10வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் மெஸ்டி அதிரடியாக பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கோல் அடித்தார்.

ஆட்டத்தின் முதல் பாதியில் சவுதி அணி வீரர்கள் கோல் அடிக்க முயன்றனர். ஆனால் அவர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதியில் சவுதி அரேபியா ஆதிக்கம் செலுத்தியது.

public holiday,argentina,qatar,saudi arabia,victory,announcement ,பொது விடுமுறை, அர்ஜென்டினா, கத்தார், சவுதி அரேபியா, வெற்றி, அறிவிப்பு

சலே அல்ஷெரி 48வது நிமிடத்திலும் ,சலேம் அல்தாவசாரி 53வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்த இரண்டு கோல்களும் ஆட்டத்தை தலைகீழாக மாற்றியது.

ஆட்டத்தை சமன் செய்ய அர்ஜென்டினா அணி முயன்றது. ஆனால் இறுதி வரை அவர்களால் கோல் அடிக்க முடியாததால், 2-1 என்ற கோல் கணக்கில் சவுதி அரேபியா அபார வெற்றி பெற்றது. கடந்த 2019ம் ஆண்டு முதல் இதுவரை 36 போட்டிகளில் தொடர்ச்சியாக அர்ஜென்டினா அணி வெற்றி பெற்றிருந்தது.

இந்நிலையில், அந்த அணி தற்போது முதல் முறையாக தோல்வியை சந்தித்துள்ளது. சவுதி அரேபியாவின் இந்த வெற்றியை, அந்நாட்டு கால்பந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனை மேலும் சிறப்பாக கொண்டாடும் வகையில், அந்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
|