Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • 2022-ம் ஆண்டுக்கான பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை

2022-ம் ஆண்டுக்கான பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை

By: Karunakaran Wed, 16 Dec 2020 09:17:30 AM

2022-ம் ஆண்டுக்கான பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணை

12-வது பெண்கள் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி-மார்ச்சில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், கொரோனா அச்சம் காரணமாக இந்த போட்டி 2022-ம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த போட்டிக்கான அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று அறிவித்தது. இதன்படி நியூசிலாந்தில் உள்ள 6 நகரங்களில் 2022-ம் ஆண்டு மார்ச் 4-ந் தேதி முதல் ஏப்ரல் 3-ந் தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.

schedule,2022 women,world cup cricket tournament,icc ,அட்டவணை, 2022 பெண்கள், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐ.சி.சி.

நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, இந்தியா ஆகிய நாடுகள் ஏற்கனவே தகுதி பெற்றுள்ள நிலையில் எஞ்சிய 3 அணிகள் எவை என்பதை நிர்ணயிப்பதற்கான தகுதி சுற்று இலங்கையில் அடுத்த ஆண்டு ஜூன் 26-ந் தேதி முதல் ஜூலை 10-ந் தேதி வரை நடக்கிறது.

உலக கோப்பை போட்டியின் தொடக்க லீக் ஆட்டத்தில் (மார்ச் 4-ந் தேதி) நியூசிலாந்து அணி தகுதி சுற்றின் மூலம் முன்னேறும் அணியை சந்திக்கிறது. இந்திய அணி தனது முதலாவது லீக்கில் (மார்ச் 6-ந் தேதி) தகுதி சுற்றில் மூலம் களம் காணும் அணியுடன் மோதுகிறது.

Tags :