Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • கேப்டன் பதவிக்கான திறனை ஷுப்மான் கில் பெற்றுக் கொள்ள வேண்டும் - நியூசிலாந்து முன்னாள் வீரர் சைமன டவுல்

கேப்டன் பதவிக்கான திறனை ஷுப்மான் கில் பெற்றுக் கொள்ள வேண்டும் - நியூசிலாந்து முன்னாள் வீரர் சைமன டவுல்

By: Karunakaran Wed, 30 Sept 2020 5:36:59 PM

கேப்டன் பதவிக்கான திறனை ஷுப்மான் கில் பெற்றுக் கொள்ள வேண்டும் - நியூசிலாந்து முன்னாள் வீரர் சைமன டவுல்

இந்திய கிரிக்கெட் அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த 19 வயதுடைய ஷுப்பமான் கில், கடந்த முறை ஐபிஎல் ஏலத்தின்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்தது. ஆனால் முதல் தொடரில் தொடர்ந்து அவருக்கு தொடக்க பேட்ஸ்மேனாக களம் இறங்கும் வாய்ப்பு கொடுக்கவில்லை. இந்த தொடரில் அவருக்கு தொடர்ந்து முதல் இடம் கொடுப்பதாக தலைமை பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் தெரிவித்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சிறப்பாக விளையாடவில்லை. ஆனால், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். மேலும் அணி வெற்றி பெறும் வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தற்போது நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரும் தற்போதைய பிரபல கிரிக்கெட் வர்ணனையாளருமான சைமன் டவுல், இன்னும் இரண்டு வருடத்திற்குள் ஷுப்மான் கில்லை கேப்டனாக பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

schubmann gill,captaincy,former new zealand batsman,simona dowell ,ஷூப்மேன் கில், கேப்டன், நியூசிலாந்து முன்னாள் பேட்ஸ்மேன், சிமோனா டோவல்

இதுகுறித்து சைன் டவுல் கூறுகையில், இன்னும் இரண்டு வருடத்திற்குள் ஷுப்மான் கில்லை ஐபிஎல் தொடரில் கேப்டனாக நாம் பார்த்தோம் என்றால், நான் அதிர்ச்சி அடைய மாட்டேன். அவர் தினேஷ் கார்த்திக் மற்றும் மோர்கன் ஆகியோருடன் ஏராளமான நேரத்தை செலவிட்டு அவர்களின் கேப்டன் திறனை பெற வேண்டும். மேலும் 8 வருடங்களாக கேப்டனாக திகழ்ந்த பிரெண்டன் மெக்கல்லமிடம் இருந்தும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

மேலும் அவர், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிராக 62 பந்தில் 70 ரன்கள் அடித்தது சிறப்பான ஸ்கோர். இந்த தொடரில் அவர் முதல் போட்டியில் பெரிய அளவில் ரன்கள் அடிக்கவில்லை. 143 ரன்கள் என்ற இலக்கு என வரும்போது நீங்கள் உங்களது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். அவர் இன்னும் களத்தில் நின்று அவருடைய முதிர்ச்சியை வெளிப்படுத்த வேண்டும். அவரால் முழுவதும் பேட்டிங் செய்து அணியை வெற்றி பெறச் செய்ய வைக்க முடியும். மோர்கன் சிறந்த பார்ட்னர்ஷிப் என்று தெரிவித்துள்ளார்.

Tags :