Advertisement

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம்

By: Nagaraj Sun, 31 July 2022 9:39:10 PM

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம்

பர்கிம்காம்: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டாவது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. பளுதுாக்குதலில் ஜெரிமி லால்ரின்னுங்கா தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.

இங்கிலாந்தின் பர்மிங்காமில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆண்களுக்கான 67 கிலோ பளுதுாக்குதல் போட்டியில், இந்தியா சார்பில் ஜெரிமி லால்ரின்னுங்கா பங்கேற்றார். 'ஸ்னாட்ச்' பிரிவில் முதலில் 136 கிலோ எடையை துாக்கிய ஜெரிமி லால்ரின்னுங்கா, இரண்டாவது முயற்சியின்போது 140 கிலோ எடையை தூக்கினார்.


இதையடுத்து நடைபெற்ற 'கிளீன் அண்டு ஜெர்க்' பிரிவில் 160 கிலோ எடையை துாக்கிய ஜெரிமி லால்ரின்னுங்கா, இதன்மூலம் 300 எடையை தூக்கி காமன்வெல்த் போட்டியில் புதிய சாதனை படைத்தார். அதோடு, தங்கப்பதக்கத்தையும் வென்றார்.

congratulations,england,commonwealth,second gold,new record ,வாழ்த்து, இங்கிலாந்து, காமன்வெல்த், இரண்டாவது தங்கம், புதிய சாதனை

ஜெரிமி லால்ரின்னுங்காவின் வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். நரேந்திர மோடி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், காமன்வெல்த் போட்டியில் இந்திய இளைஞர் சக்தி புதிய வரலாறு படைத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

காமன்வெல்த் போட்டியில் முதன்முறையாக போட்டியிட்ட 19 வயதாகும் ஜெரிமி லால்ரின்னுங்கா, அதில் புதிய சாதனை படைத்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மிகச் சிறிய வயதில் நாட்டுக்கு மிகப் பெரிய பெருமையையும் பெருமிதத்தையும் தந்திருப்பதாகக் கூறியுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அவரது எதிர்காலம் சிறக்க வாழ்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Tags :