Advertisement

ரஹானேவின் கேப்டன்ஷிப் பற்றி புகழ்ந்து தள்ளியுள்ள சேவாக்

By: Nagaraj Sat, 26 Dec 2020 8:11:03 PM

ரஹானேவின் கேப்டன்ஷிப் பற்றி புகழ்ந்து தள்ளியுள்ள சேவாக்

ரஹானேவின் கேப்டன்ஷிப் பற்றி புகழ்ந்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் சேவாக்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி இன்று பாக்சிங் போட்டியாக மெல்போர்ன் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் முதலில் பேட்டிங் செய்வதாக தீர்மானம் செய்தார்.

அதன்படி முதல் நாள் ஆட்டநேரம் முடிவதற்கு முன்பாக தங்களது முதல் இன்னிங்சை முடித்த ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக அந்த அணியின் முன்னணி இளம் வீரரான மார்னஸ் லாபுஷேன் 48 ரன்களையும், டிராவிஸ் ஹெட் 38 ரன்களும் குவித்தனர். இந்திய அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 4 விக்கெட்டுகளையும், சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

rahane,captaincy,sehwag,praised,twitter post ,ரஹானே, கேப்டன்ஷிப், சேவாக், புகழ்ந்தார், டுவிட்டர் பதிவு


அறிமுக வீரர் முகமது சிராஜ் தனது அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இந்திய அணி பந்து வீச்சாளர்களின் இந்த சிறப்பான பந்துவீச்சு தற்போது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் ரஹானேவின் கேப்டன்ஷிப் புகழ்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் சில தெளிவான கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : இந்திய வீரர்களின் திறனை சரியாக அறிந்து பந்துவீச்சாளர்களை சரியாக மாற்றி மாற்றி பந்துவீச வைத்ததார். மேலும் சரியான இடத்தில் பீல்டர்களை நிற்க வைத்து வியூகம் வகுத்ததால் விக்கெட்டுகள் விழுந்தன என்றும் ரஹானேவின் கேப்டன்சியை புகழ்ந்து அவரது கருத்துக்களை பதிவு செய்துள்ளார். மேலும் அஸ்வின், பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் தங்களது சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்தியதால் ஆஸ்திரேலிய அணி 195 ரன்களில் சுருண்டது எனவும் பதிவிட்டுள்ளார்.

மேலும் தற்போது பவுலர்களின் வேலை முடிந்தது. இனி பேட்ஸ்மேன்கள் கையில்தான் ஆட்டம் உள்ளது என பதிவிட்டுள்ளார். சேவாக்கின் இந்த கருத்து மட்டுமின்றி இந்திய ரசிகர்கள் பலரும் ரஹானேவின் இந்த கேப்டன்சியை பாராட்டி சமூக வலைதளங்களில் தங்களது கருத்துக்களை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|