Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா, டொமினிக் கால்இறுதிக்கு தகுதி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா, டொமினிக் கால்இறுதிக்கு தகுதி

By: Karunakaran Tue, 08 Sept 2020 2:00:50 PM

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா, டொமினிக் கால்இறுதிக்கு தகுதி

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில் 23 கிராண்ட்சிலாம் பட்டம் பெற்ற 3-ம் நிலை வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், 4-வது சுற்றில் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த மரியா ‌ஷகாரியை எதிர்கொண்டு, 6-3 என்ற கணக்கில் வென்று கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் பல்கேரியாவை சேர்ந்த பிரோன்கோவா 6-4, 6-7 (5-7), 6-3 என்ற கணக்கில் அலிசியா கோர்னெட்டை தோற்கடித்தார். 2-வது வரிசையில் உள்ள சோபியா கெனின் 4-வது சுற்றில் அதிர்ச்சிகரமாக 16-ம் நிலை வீராங்கனையான எலிஸ் மெர்டன்ஸிடம் 6-3,6-3 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

serena,dominic,quarterfinals,us open tennis tournament ,செரீனா, டொமினிக், காலிறுதி, யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டி

அசரென்கா 5-7, 6-1, 6-4 என்ற கணக்கில் கரோலினாவை தோற்கடித்து கால் இறுதிக்கு தகுதி பெற்றார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 4-வது சுற்றில் 2-ம் நிலை வீரரான டொமினிக் தீம் 7-6 (7-4), 6-1, 6- 1 என்ற கணக்கில் பெலிக்சை வீழ்த்தி கால் இறுதிக்கு தகுதி பெற்றார். 3-வது வரிசையில் உள்ள மெட்வதேவ் 6-4, 6-1, 6-0 என்ற கணக்கில் பிரான்செசை தோற்கடித்தார்.

6-வது வரிசையில் உள்ள மெட்டோ பெரானட்டி அதிர்ச்சிகரமாக தோற்றார். 10-வது இடத்தில் உள்ள ஆந்த்ரே ருப்லேவ் 4-6, 6-3, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் அவரை வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றார் மேலும், 21-வது வரிசையில் உள்ள ஆஸ்திரேலிய வீரர் மினாவுரும் 4-ம் சுற்றில் வெற்றி பெற்றார். .

Tags :
|