Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • மெதுவாக பந்துவீசியதற்காக ஸ்ரேயாஸ் அய்யருக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பு

மெதுவாக பந்துவீசியதற்காக ஸ்ரேயாஸ் அய்யருக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பு

By: Karunakaran Wed, 30 Sept 2020 2:25:36 PM

மெதுவாக பந்துவீசியதற்காக ஸ்ரேயாஸ் அய்யருக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிப்பு

அபுதாபியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது லீக் ஆட்டம் நடைபெற்றபோது, சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது. இறுதியாக ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களமிறங்கியது.

இதில் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஜோடி களமிறங்கினர். டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேஷ் ஐய்யர் 21 பந்தில் 17 ரன்கள் எடுத்து ரஷித்கான் பந்துவீச்சில் அவுட் ஆனார். இறுதியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. அதன்படி, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது.

shreyas iyer,fined,slow bowling,ipl ,ஸ்ரேயாஸ் ஐயர், அபராதம், மெதுவான பந்துவீச்சு, ஐ.பி.எல்

இந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பந்துவீச நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொண்டது. மெதுவாக பந்து வீசியதற்காக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் டெல்லி அணி செய்யும் முதல் தவறு என்பதால் கேப்டனுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தின்போது, மெதுவாக பந்துவீசியதற்காக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலிக்கு 15 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறவுள்ள ஆட்டத்தில் கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

Tags :
|