Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • அமெரிக்காவில் நடந்த தடகளப் போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கருக்கு வெள்ளிப்பதக்கம்

அமெரிக்காவில் நடந்த தடகளப் போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கருக்கு வெள்ளிப்பதக்கம்

By: Nagaraj Sun, 09 Apr 2023 3:05:05 PM

அமெரிக்காவில் நடந்த தடகளப் போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கருக்கு வெள்ளிப்பதக்கம்

புதுடெல்லி: வெள்ளிப்பதக்கம் வென்றார்... அமெரிக்காவில் நடைபெற்ற தடகளப் போட்டியில் இந்தியாவின் தேஜஸ்வின் சங்கர் டெகாத்லான் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ஜிம் கிளிக் ஷூட்அவுட் தடகளப் போட்டி அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. அமெரிக்க தடகள கூட்டமைப்பு நடத்திய டெகாத்லான் போட்டியில் இந்திய வீரர் தேஜஸ்வின் சங்கர் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.

championship,competetion,tennis, ,அமெரிக்கா, தேஜஸ்வின் சங்கர், வெள்ளிப் பதக்கம்

உயரம் தாண்டுதல், 400 மீட்டர் ஓட்டம், 100 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 110 மீட்டர் தடை தாண்டுதல், வட்டு எறிதல், போல்வால்ட், ஈட்டி எறிதல் மற்றும் 1500 மீட்டர் ஓட்டம் உள்ளிட்ட 10 போட்டிகள் டெகாத்லான் கொண்டுள்ளது.

தேஜஸ்வின் சங்கர் மொத்தம் 7,648 புள்ளிகள் எடுத்துள்ளார். இது 2011ல் பாரதிந்தர் சிங்கின் 7,658 தேசிய சாதனையை விட 10 புள்ளிகள் குறைவு.

Tags :
|