Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் கால்இறுதி போட்டிக்கு சிந்து, ஸ்ரீகாந்த் தகுதி பெற்றனர்

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் கால்இறுதி போட்டிக்கு சிந்து, ஸ்ரீகாந்த் தகுதி பெற்றனர்

By: Nagaraj Fri, 04 Aug 2023 8:33:59 PM

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் கால்இறுதி போட்டிக்கு சிந்து, ஸ்ரீகாந்த் தகுதி பெற்றனர்

சிட்னி: ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் கால்இறுதி போட்டிக்கு சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலிய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிட்னியில் நடந்து வருகிறது. நேற்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் முன்னாள் ‘நம்பர் ஒன்’ வீரரான ஸ்ரீகாந்த் 21-10, 21-17 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் சு லி யாங்கை தோற்கடித்து கால் இறுதிக்கு முன்னேறினார்.

இதேபோல், இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரனாய் சரிவில் இருந்து மீண்டு, சீன தைபேயின் சி யு ஜென்னை 19-21, 21-19, 21-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். பிரியான்ஷூ ரஜாவத் 21-8, 13-21, 21-19 என்ற செட் கணக்கில் சீன தைபேயின் வாங் சூ வெய்யை விரட்டியடித்தார்.

australia,badminton,open,qualification,quarter-final,sindhu,srikanth ,ஆஸ்திரேலியா, ஓபன், கால்இறுதி, சிந்து, தகுதி, பேட்மிண்டன், ஸ்ரீகாந்த்

மற்ற இந்திய வீரர்கள் கிரண் ஜார்ஜ், மிதுன் மஞ்சுநாத் ஆகியோர் தங்களது ஆட்டங்களில் தோல்வி கண்டு வெளியேறினர். பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-14, 21-10 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீராங்கனை ஆகார்ஷி காஷ்யப்பை தோற்கடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றார்.

பெண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் திரிஷா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி 10-21, 20-22 என்ற நேர்செட்டில் ஜப்பானின் மயு மட்சுமோடோ-வாகனா நகஹரா இணையிடம் வீழ்ந்தது.

Tags :
|
|