Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் சோபியா - இகா ஸ்வியாடெக் மோதுகின்றனர்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் சோபியா - இகா ஸ்வியாடெக் மோதுகின்றனர்

By: Nagaraj Fri, 09 Oct 2020 09:46:56 AM

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் இறுதி போட்டியில் சோபியா - இகா ஸ்வியாடெக் மோதுகின்றனர்

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. தற்போது விறுவிறுப்பாக போட்டிகள் நடந்து வருகிறது.

இதில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. அரையிறுதி போட்டியில் அமெரிக்காவின் சோபியா கெனின் (தரவரிசை 4) - செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா (தரவரிசை 7) ஆகியோர் பலப்பரீட்சை நடத்தினர். இதில் சோபியா கெனின் 6-4, 7-5 என நேர்செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக் - அர்ஜென்டினாவின் நாடியாக பொடோரோஸ்கா மோதினர். இதில் இகா 6-2, 6-1 என எளிதில் வெற்றி பெற்றார்.

சோபியா கெனின் - இகா ஸ்வியாடெக் இறுதிப் போட்டியில் மோதுகின்றனர்.

Tags :
|
|