Advertisement

டெல்லி அணியை அலறவிட்ட சஹா பற்றி சில தகவல்கள்

By: Nagaraj Wed, 28 Oct 2020 2:02:08 PM

டெல்லி அணியை அலறவிட்ட சஹா பற்றி சில தகவல்கள்

டெல்லி அணியை அலற விட்ட சஹா... டெல்லி கேப்பிடல் அணிக்கு எதிராக நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஹைதராபாத் அணி நேற்று வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 219 ரன்கள் எடுத்திருந்தது. ஆனால் டெல்லி அணியால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 19 ஓவர்களில் வெறும் 131 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால் 88 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணியின் வீரர்கள் ரன் குவிப்பில் ஈடுபட்டது இந்த வெற்றிக்கு வழி வகுத்தது. ஹைதராபாத் கேப்டன் வார்னர் நேற்றைய போட்டியில் 34 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். அவரைவிட அதிரடியாக விளையாடிய விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா 45 பந்துகளில் 87 ரன்கள் எடுத்தார். இதில் 12 பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்சர்கள் ஆகியவையும் அடக்கம். இவர்தான் நேற்றைய போட்டியில் ஆட்டநாயகனாக தேர்வானார்.

இவரைப் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் தெரிந்து கொள்ளுங்கள். விருத்திமான் சஹா 1984ஆம் ஆண்டு அக்டோபர் 24ஆம் தேதியன்று மேற்குவங்க மாநிலம் சக்தி கார்க் நகரில் பிறந்தார். கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தான் அவர் தனது 36வது பிறந்த நாளை கொண்டாடினார்.

viruthiman saha,ipl,india,122 matches ,
விருத்திமான் சஹா, ஐ.பிஎல், இந்தியா, 122 போட்டிகள்

2010ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய விருத்திமான் சஹா அதே ஆண்டு நவம்பர் மாதம் நியூசிலாந்து அணிக்கு எதிராக சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.

சென்ற ஆண்டு வரை டெஸ்ட் போட்டிகளில் அவ்வப்போது விளையாடி வந்த விருத்திமான் சஹா இந்தியாவுக்காக இதுவரை 37 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால் 2014ஆம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி இலங்கைக்கு எதிராக விளையாடிய ஒருநாள் போட்டி தான் அவர் இந்திய அணிக்காக கடைசியாக விளையாடிய சர்வதேச ஒருநாள் போட்டி. இதுவரை அவர் வெறும் 9 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே இந்தியாவுக்காக விளையாடியுள்ளார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பெரிய அளவில் சோபிக்கவில்லை என்றாலும் ஐபிஎல் அவருக்கு பெயர் பெற்று கொடுத்தது. இதுவரை 122 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார் விருத்திமான் சஹா.

Tags :
|
|