Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் விளையாட்டு போட்டிகள் தொடக்கம்

தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் விளையாட்டு போட்டிகள் தொடக்கம்

By: Nagaraj Wed, 30 Aug 2023 1:37:32 PM

தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் விளையாட்டு போட்டிகள் தொடக்கம்

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தேசிய தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார்.

தஞ்சை அன்னை சத்தியா விளையாட்டு மைதானத்தில் நேற்று தமிழ்நாடு நவீன பென்டத்லான் சங்கம் சார்பில் 13-வது பயத்லி- முத்தரப்பு மாநில சேம்பியன்ஷிப் , 6-வது லேசர் ரன் மாநில சேம்பியன்ஷிப், முதலாவது டெட்ராத்லான் மாநில சேம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது.

இதில் நீச்சல் போட்டிகள், ரன்னிங், துப்பாக்கி சுடுதல், உறை வால் வீச்சு போட்டிகள் நடத்தப்பட்டன. முதலாவதாக அன்னை சத்தியா விளையாட்டு மைதானத்தில் உள்ள குந்தவை நீச்சல் குளத்தில் நடந்த நீச்சல் போட்டியை மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், ஓய்வு பெற்ற கஸ்டம் அதிகாரியும் தமிழ்நாடு நவீன பென்டத்லான் சங்கத்தின் மூத்த துணை தலைவருமான அழகேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

sports competition,collector,thanjavur,sangam,2nd day ,விளையட்டு போட்டி, கலெக்டர், தஞ்சாவூர், சங்கம், 2வது நாள்

தஞ்சை மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், தமிழ்நாடு நவீன பென்டத்லான் சங்கத்தின் பொதுச் செயலாளர் பால விநாயகம், நீச்சல் பயிற்சியாளர் ரஞ்சித், சத்யா விளையாட்டு மைதான செயலாளர் மணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நீச்சல் போட்டியில் 9 வயதுக்கு உட்பட்ட மாணவ- மாணவிகளுக்கு ஒரு பிரிவாகவும், சீனியர் பிரிவை சேர்ந்தவர்கள் ஒரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. இதேபோல் ஓட்டப்பந்தயம் ,துப்பாக்கி சுடுதல், உறைவாள் வீச்சு போட்டிகளும் நடத்தப்பட்டது. இதில் 20 மாவட்டங்களில் இருந்து 250-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவில் நடைபெறும் போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு மெடல் ,சான்றிதழ் வழங்கப்படும்.

மேலும் அவர்கள் அடுத்த மாதத்தில் மகாராட்டிரம் மாநிலம் புனேவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் விளையாடுவதற்கு தேர்வு செய்யப்படுவர். முன்னதாக தஞ்சாவூர் மாவட்ட நவீன பென்டத்லான் சங்கம் செயலாளர் நிர்மல் குமார், தலைவர் மணி ஆகியோர் அனைவரையும் வரவேற்றுப் பேசினர். தொடர்ந்து இன்றும் இரண்டாவது நாளாக போட்டிகள் நடைபெறுகின்றன.

Tags :
|