Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • இன்று ஆசியக்கோப்பை இறுதி ஆட்டத்தில் மோதுகின்றன இலங்கை – பாகிஸ்தான் அணிகள்

இன்று ஆசியக்கோப்பை இறுதி ஆட்டத்தில் மோதுகின்றன இலங்கை – பாகிஸ்தான் அணிகள்

By: Nagaraj Sun, 11 Sept 2022 10:35:13 AM

இன்று ஆசியக்கோப்பை இறுதி ஆட்டத்தில் மோதுகின்றன இலங்கை – பாகிஸ்தான் அணிகள்

துபாய்: இலங்கை – பாகிஸ்தான் அணிகள் மோதல்... ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.

இப்போட்டியில் இதுவரை இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் சாம்பியன் ஆகியுள்ளன. கடைசியாக இலங்கை 2014-ஆம் ஆண்டிலும், பாகிஸ்தான் 2012-ஆம் ஆண்டிலும் கோப்பை வென்றுள்ளன.

இந்தப் போட்டி இலங்கையில் நடந்திருக்க வேண்டிய ஒன்றாகும். எனினும், அந்நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமற்ற சூழல் காரணமாக போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டது. ஆசிய கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் மோதுவதே பெரும்பாலானோரின் எதிா்பாா்ப்பாக இருந்த நிலையில், இந்தியா ஏமாற்றம் தந்தது.

today conflict,pakistan,sri lanka,crisis,defeat,victory ,இன்று மோதல், பாகிஸ்தான், இலங்கை, நெருக்கடி, தோல்வி, வெற்றி

எதிா்பாராத வகையில் அசத்தலாக ஆடி முன்னேறி வந்திருக்கிறது இலங்கை. இக்கட்டான சூழலில் இலங்கை இந்தக் கோப்பையை வெல்லும் பட்சத்தில், அணிக்கும், அந்நாட்டு ரசிகா்களுக்கும் நம்பிக்கை அளிப்பதாக இருக்கும். ஆனால் பாகிஸ்தான் அவ்வளவு எளிதாக கோப்பையை விட்டுத் தராது. சூப்பா் 4 சுற்றில் கண்ட தோல்விக்காக, இறுதி ஆட்டத்தில் இலங்கைக்கு சரியான பதிலடி கொடுக்க முனையும்.

பதிலுக்கு இலங்கையும் டாஸ் மூலமாக பாகிஸ்தானுக்கு ‘செக்’ வைக்க வாய்ப்பிருக்கலாம். ஏனெனில், முதலில் பேட் செய்வது பாகிஸ்தானுக்கு உகந்ததாக இருக்கவில்லை. அவ்வாறு ஆடிய இரு ஆட்டங்களில் அந்த அணி தோல்வியைச் சந்தித்தது. எனவே, இலங்கை டாஸ் வெல்லும் பட்சத்தில் முதலில் ஃபீல்டிங்கை தோ்வு செய்து பாகிஸ்தானுக்கு உளவியல் நெருக்கடி அளிக்க வாய்ப்புள்ளது.

Tags :
|
|