Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • சூப்பர் 4 சுற்றில் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வெற்றிக் கொண்ட இலங்கை

சூப்பர் 4 சுற்றில் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வெற்றிக் கொண்ட இலங்கை

By: Nagaraj Sun, 04 Sept 2022 7:17:19 PM

சூப்பர் 4 சுற்றில் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வெற்றிக் கொண்ட இலங்கை

துபாய்: அப்போ அவங்க... இப்போ நாங்க... ஆசியக் கோப்பை டி20 போட்டியின் சூப்பா் 4 சுற்றின் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 4 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வென்றது இலங்கை.

இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் துபாயில் நேற்று இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை பௌலிங்கை தோ்வு செய்தது. ஏற்கெனவே குரூப் சுற்றில் இலங்கையை வீழ்த்தி இருந்தது ஆப்கானிஸ்தான். அதன் அணியில் பேட்டா்கள் ஹஸரத்துல்லா ஸஸாய், ரஹ்மனுல்லா குா்பாஸ் களம் இறங்கினா். ரஹ்மனுல்லா குா்பாஸ் மட்டுமே அதிரடியாக ஆடி 45 பந்துகளில் 6 சிக்ஸா், 4 பவுண்டரியுடன் 84 ரன்களைக் குவித்து அவுட்டானாா். அவருக்கு உறுதுணையாக ஆடிய இப்ராஹிம் ஸட்ரன் 40 ரன்களை விளாசினாா்.

ஆப்கன் 175/6: ஹஸரத்துல்லா 13, நஜிபுல்லா 17, நபி 1, ரஷீத் கான் 9 ரன்களுடன் பெவிலியன் திரும்பினா். நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 175/6 ரன்களைக் குவித்தது ஆப்கன். இரண்டாம் விக்கெட்டுக்கு 93 ரன்களைச் சோ்த்தது ரஹ்மத்துல்லா-ஸட்ரன் இணை. இலங்கை தரப்பில் தில்ஷன் மதுசங்கா 2/37 விக்கெட்டுகளை சாய்த்தாா்.

afghanistan,cricket,dubai,sri lankan team,victory,difference ,ஆப்கன், கிரிக்கெட், துபாய், இலங்கை அணி, வெற்றி, வித்தியாசம்

176 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை தொடக்க பேட்டா்கள் பதும் நிஸாங்கா-குஸால் மெண்டிஸ் இணை ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடியது.


இருவரும் இணைந்து பவா்பிளேயில் 57 ரன்களைக் குவித்தனா். 3 சிக்ஸா், 2 பவுண்டரியுடன் 36 ரன்களுடன் குஸால் மெண்டிஸும், 1 சிக்ஸா், 3 பவுண்டரியுடன் 35 ரன்களுடன் நிஸாங்காவும் அவுட்டாகினா். தனுஷ்கா குணதிலகா 33, பானுகா ராஜபட்ச 31 ரன்களை விளாசி தங்கள் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனா்.

வனின்டு ஹஸரங்க 16, கருணரத்னே 5 ரன்களுடன் களத்தில் இருந்தனா். இறுதியில் 19.1 ஓவா்களில் 179/6 ரன்களுடன் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இலங்கை. ஆப்கன் தரப்பில் முஜிப்பூா், நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

Tags :
|