Advertisement

பெங்களூர் அணியை வீழத்தியது சன்ரைசர்ஸ் அணி

By: Nagaraj Sat, 07 Nov 2020 10:52:21 PM

பெங்களூர் அணியை வீழத்தியது சன்ரைசர்ஸ் அணி

பெங்களுரு அணியை வீழ்த்தி குவாலிபையர் 2 க்கு தகுதி பெற்றுள்ளது சன்ரைசர்ஸ் அணி.

ஐபிஎல் தொடரின் எலிமினேடர் போட்டி அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் புள்ளி பட்டியலில் மூன்றாவது மற்றும் நான்காவது இடம் பிடித்த சன்ரைசர்ஸ் ஐத்ராபாத் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் விளையாடிய பெங்களுரு அணியில் தொடக்க வீரர் வீராட் கோலி மற்றும் படிக்கல் களம் இறங்க விராட் கோலி 6 ரன்னில் வெளியேற பின்னர் வந்த படிக்கல் 1 ரன்னில் வெளியேறினார்.

sunrisers,last over,thrill win,williamson ,சன்ரைசர்ஸ் அணி, கடைசி ஓவர், திரில் வெற்றி, வில்லியம்சன்

இதையடுத்து களத்திற்கு வந்த பின்ச் மற்றும் டிவில்லியர்ஸ் இருவரும் சிறிது நேரம் நிலைத்து விளையாட பின்ச் 32 ரன்னில் வெளியேற பின்னர் நிலைத்து விளையாடிய டி வில்லியர்ஸ் அரைசதம் வீளாசினார். பெங்களுரு அணி 131/7 ரன்கள் சேர்த்தது.

பின்னர் விளையாடிய சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க வீரர் கௌசாமி டக் அவுட் ஆகி வெளியேற டேவிட் வார்னர் 17 ரன்னில் அவுட் ஆகி அதிரச்சி அளிக்க பின்னர் வந்த மனிஷ் பான்டே ஐம்பா பந்தில் வெளியேற ரியன் கார்க் 7 ரன்னில் அவுட் ஆகினார். பின்னர் ஜோடி சேர்ந்த வில்லியம்சன் மற்றும் ஹோல்டர் இருவரும் கடைசி ஓவர் வரை போராடினர். வில்லியம்சன் அரைசதம் வீளாச கடைசி ஓவரில் திரில் வெற்றி பெற்றது சன்ரைசர்ஸ் அணி.

Tags :