Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி

By: Karunakaran Wed, 30 Sept 2020 1:53:21 PM

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி

அபுதாபியில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது லீக் ஆட்டம் நடைபெற்றபோது, சன்ரைசர்ஸ் ஐதராபாத் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பேர்ஸ்டோவ் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 9.3 ஓவரில் 77 ரன்கள் குவித்தது. டேவிட் வார்னர் 33 பந்தில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கேன் வில்லியம்சன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 26 பந்துகளை சந்தித்த வில்லியம்சன் 5 பவுண்டரிகள் உள்பட 41 ரன்கள் குவித்து வெளியேறினார். இறுதியாக ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.

sunrisers hyderabad,delhi capitals,15 runs,ipl ,சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி தலைநகரங்கள், 15 ரன்கள், ஐ.பி.எல்

பின்னர் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஜோடி களமிறங்கினர். டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேஷ் ஐய்யர் 21 பந்தில் 17 ரன்கள் எடுத்து ரஷித்கான் பந்துவீச்சில் அவுட் ஆனார். பின்னர் வந்த வீரர்கள் யாரும் நிலைத்து நின்று ஆடாததால் டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இறுதியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. ஐதராபாத் அணியின் ரஷித் கான் 4 ஓவர்களை வீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார். புவனேஷ்குமார் 2 விக்கெட்களை வீழ்த்தி வெற்றிக்கு வழிவகுத்தார்.

Tags :