Advertisement

  • வீடு
  • விளையாட்டு
  • ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

By: Karunakaran Sun, 11 Oct 2020 3:57:44 PM

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக சன்ரைசர்ஸ் ஐதராபாத் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு

13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வருகிறது. லீக் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். 23-வது நாளான இன்று 2 ஆட்டங்கள் நடக்கிறது. துபாயில் மாலை 3.30 மணிக்கு தொடங்கிய முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் வார்னர் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். வார்னர் தலைமையிலான ஐதராபாத் அணி 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. ஸ்டீவ் சுமித் தலைமையிலான ராஜஸ்தான் அணி 2 வெற்றி, 4 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் இருக்கிறது.

sunrisers hyderabad,toss,batting,rajasthan royals ,சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டாஸ், பேட்டிங், ராஜஸ்தான் ராயல்ஸ்

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில், 1. டேவிட் வார்னர், 2. பேர்ஸ்டோவ், 3. மணிஷ் பாண்டே, 4. கேன் வில்லியம்சன், 5. விஜய் சங்கர், 6. பிரியம் கார்க், 7. அபிஷேக் சர்மா, 8. ரஷித் கான், 9. சந்தீப் சர்மா, 11. கலீல் அகமது, 12. டி. நடராஜன் ஆகியோர் உள்ளனர்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில், 1. ஜோஸ் பட்லர், 2. ராபின் உத்தப்பா, 3. சஞ்சு சாம்சன், 4. ஸ்டீவ் ஸ்மித், 5. பென் ஸ்டோக்ஸ், 6. ரியான் பராக், 7. ராகுல் டெவாட்டியா, 8. ஆர்சர், 9. ஷ்ரேயாஸ் கோபால், 10. கார்த்திக் தியாகி, 11. வருண் ஆரோன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

Tags :
|